Tamil News Today LIVE: தமிழ்நாடு இயக்குநர் சங்கத் தேர்தல் தேதி வெளியீடு

Tamil Nadu News Today LIVE: Petrol and Diesel Price: சென்னையில் தொடர்ந்து 100-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.101. 40 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 91.43 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Tamilnadu News Update: திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில்’ கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது,  ராமநாதபுரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு நடைபெறும். நாகையில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu News LIVE Updates:

#IPLAuction2022: ஐ.பி.எல் தொடருக்கான மெகா ஏலம் பெங்களூருவில் இன்று தொடங்குகிறது. குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் ஏலத்தில் முதன் முறையாக பங்கேற்கின்றன. இன்றும், நாளையும் நடைபெறும் ஏலத்தில் 590 வீரர்களின் பெயர், பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

#Ukraine இன்னும் ஒரு வாரத்திற்குள் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கலாம் என்று வெள்ளை மாளிகை சந்தேகம் தெரிவிக்கிறது. எனவே அடுத்த 48 மணி நேரத்திற்குள் அமெரிக்கர்கள் உக்ரைனை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உக்ரைன் மீது படையெடுத்தால் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் எச்சரித்துள்ளன.

Live Updates

1:31 (IST) 12 Feb 2022
தமிழ்நாடு இயக்குநர் சங்கத் தேர்தல் தேதி வெளியீடு!

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தல் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறு என தெரிவிக்கப்பட்டுள்ளது.


12:35 (IST) 12 Feb 2022
சென்னையில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


12:34 (IST) 12 Feb 2022
15வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் தொடங்கியது

பெங்களூருவில் 15வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் தொடங்கியது. இன்றைய ஐ.பி.எல். மெகா ஏலத்தில் 161 வீரர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது.


11:49 (IST) 12 Feb 2022
வரும் 16-ம் தேதி முதல் மழலையர் பள்ளிகளை திறக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்

திறந்த வெளி, உள் அரங்கு பொருட்காட்சிகளுக்கு அனுமதி வழங்க வாய்ப்பு உள்ளதாகவும், வரும் 16-ம் தேதி முதல் மழலையர் பள்ளிகளை திறக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறார்.


11:48 (IST) 12 Feb 2022
ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜர்

பணமோசடி வழக்கில் கடந்த 10ம் தேதி அன்று சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார்.


11:33 (IST) 12 Feb 2022
திரையரங்குகளில் 100% பார்வையாளர்களை அனுமதிக்க வாய்ப்பு

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. திரையரங்குகளில் 100% பார்வையாளர்களை அனுமதிக்க வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


11:10 (IST) 12 Feb 2022
தஞ்சையில் 3 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

தஞ்சாவூர் மாவட்டம் கீழவாசல் அருகே மகர்நோம்புச் சாவடி தைக்கால் தெரு பகுதியில், கிளாபத் அமைப்பைச் சேர்ந்த அப்துல்காதர் மற்றும் முகம்மது யாசின் ஆகியோர் வீடுகளில் இன்று அதிகாலை 5 மணி முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.


10:45 (IST) 12 Feb 2022
மீனவர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்-கமல்ஹாசன்!

தமிழக மீனவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும்-கமல்ஹாசன்!


10:42 (IST) 12 Feb 2022
வரும் பிப். 19 ஆம் தேதி கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறாது!

தமிழகத்தில் 2,792 ஊராட்சி, 24 நகராட்சிகளில் 100% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. வரும் பிப். 19 ஆம் தேதி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


10:42 (IST) 12 Feb 2022
ஒரே நாளில் 50,407 பேருக்கு கொரோனா!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்’ மேலும் 50,407 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தொற்றுக்கு ஒரே நாளில் 804 பேர் உயிரிழந்தனர். மேலும் 1,36,962 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகினர்.


9:52 (IST) 12 Feb 2022
இஸ்லாமிய பெண்களின் கல்வியை பறிக்க திட்டமிட்ட முயற்சி!

அரசியலமைப்பு சட்டப்படி அவரவர் விரும்பும் ஆடையை அணிய உரிமை உள்ளது. ஹிஜாப் விவகாரத்தை’ பாஜக கையில் எடுத்திருப்பது, இஸ்லாமிய பெண்களின் கல்வியை பறிப்பதற்கான திட்டமிட்ட முயற்சி என கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.


9:51 (IST) 12 Feb 2022
கர்நாடகாவில் என்ன நடந்தாலும் பாஜக தான் பொறுப்பு!

தேர்தல் நெருங்கும் போதெல்லாம் மதங்களை பிளவுபடுத்தும் பிரச்சனைகளை’ பாஜக உருவாக்கி’ அரசியல் ஆதாயம் தேடுகிறது. கர்நாடகாவில் என்ன நடந்தாலும், அதற்கு பாஜக தான் பொறுப்பு என மல்லிகார்ஜூன கார்கே கடுமையாக சாடியுள்ளார்.


9:50 (IST) 12 Feb 2022
உத்தராகண்ட் மாநிலத்தில் லேசான நிலநடுக்கம்!

உத்தராகண்ட் மாநிலத்தில் இன்று காலை 5 மணிக்கு மிதமான நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.1-ஆக பதிந்துள்ளது.


9:50 (IST) 12 Feb 2022
ஓபிஎஸ், ஈபிஎஸ் மோடியின் வாரிசுகளாக மாறிவிட்டார்கள்!

ஒரே நாடு, ஒரே தேர்தல் என பேசுவதன் மூலம், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் மோடியின் வாரிசுகளாக மாறிவிட்டார்கள் என பாலகிருஷ்ணன் விமர்னம்.


8:50 (IST) 12 Feb 2022
உலகில் 70% பேர் தடுப்பூசி செலுத்தினால் தான் கொரோனா குறையும்!

உலகில் 70 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் நடப்பாண்டின் இறுதிக்குள் கொரோனா தொற்றின் தாக்கம் குறையும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.


8:50 (IST) 12 Feb 2022
22-வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்!

தமிழ்நாடு முழுவதும் இன்று 22-வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதுவரை 2வது டோஸ் செலுத்தாத அனைவரும் தவறாமல் பங்கேற்க அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.


8:50 (IST) 12 Feb 2022
ஊரடங்கு.. ஸ்டாலின் ஆலோசனை!

தமிழகத்தில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு வரும் 15-ம் தேதியுடன் நிறைவு பெறும் நிலையில், மேலும் ஊரடங்கு தளர்வுகள் அளிப்பது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின்’ சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.