அவுஸ்திரேலிய பிரபலத்தை மணக்கும் தமிழ்ப்பெண் வினு ராமன் யார்? காதலில் விழுந்த சுவாரசிய கதை


அவுஸ்திரேலிய கிரிக்கெட் பிரபலமும், கோடீஸ்வரருமான கிளென் மேக்ஸ்வெல்லுக்கும் தமிழ்ப்பெண்ணான வினி ராமன் என்பவருக்கும் வெகு விரைவில் திருமணம் நடக்கவுள்ளது.

இதையடுத்து தமிழ் பாரம்பரிய முறையில் அச்சடிக்கப்பட்ட திருமண மஞ்சள் நிற பத்திரிக்கை இணையத்தில் வைரலாகியுள்ளது.
மேக்ஸ்வெல் – வினி ராமன் இருவரும் கடந்த 2013லேயே சந்தித்துவிட்டனர்.

ஆம் அப்போதில் இருந்து இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்துள்ளனர்.

முதலில் வினி ராமனை மேக்ஸ்வெல் தான் சந்தித்து பேசி இருக்கிறார். அடிக்கடி சந்தித்த இவர்கள் நண்பர்களாக பழகி இருக்கின்றனர்.

இந்த நிலையில் வினி மீதான தனது விருப்பத்தை மேக்ஸ்வெல் 2017ல் தெரிவித்துள்ளார்.
2017ல் இருந்து இவர்கள் இருவரும் இதையடுத்து டேட்டிங் சென்றுள்ளனர்.

அதன்பின் அதே வருடம் மேக்ஸ்வெல் வினியிடம் தனது காதலை தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு பின் வினி மேக்ஸ்வெல் காதலை ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.

தமிழ் பின்னணியை கொண்ட வினி ராமன் தமிழ்நாட்டில் பிறந்தவர் கிடையாது. இவர் பிறக்கும் முன்பே வினியின் பெற்றோர் அவுஸ்திரேலியா சென்றுவிட்டனர், அதுவரையில் தமிழ்நாட்டில் தான் வசித்தனர்.

ஆனாலும் தமிழ் பாரம்பரியத்தை இவர்கள் பின்பற்றி வந்துள்ளனர். அதனால்தான் திருமண பத்திரிக்கையை தமிழ் பாணியில் மஞ்சள் நிறத்தில் அடித்துள்ளனர்.

மெல்போர்னில் பிறந்து வளர்ந்து Pharmacy படித்தவர் வினி ராமன் என்பது குறிப்பிடத்தக்கது.  Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.