இரண்டு துக்க சம்பவங்கள்; நின்று போயின திருமணங்கள்| Dinamalar

ஷிவமொகா : இரண்டு வெவ்வேறு துக்க சம்பவங்களால், இரண்டு திருமணங்கள் கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டன.மணமகளின் பாட்டி, மணமகனின் தந்தை இறந்ததால் இந்த முடிவுக்கு அந்தந்த குடும்பத்தினர் வந்தனர்.ஷிவமொகாவின் பத்ராவதி அருகே உள்ள, அந்தரகங்கே கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும், நாராயணபுராவை சேர்ந்த வாலிபருக்கும், இன்று திருமணம் நடப்பதாக இருந்தது. அதற்காக, இரு வீட்டாரும் ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

ஆனால், 10ல் மணமகளின் பாட்டி இறந்து விட்டதால், திருமணம் தள்ளி வைக்கப்பட்டது. அதே போல, பத்ராவதி அருகே உள்ள உஜ்ஜனிபுராவை சேர்ந்த போரே கவுடா என்பவரது மகனுக்கு, கடந்த 10ல் திருமணம் நடப்பதாக இருந்தது. ஆனால், முந்தைய நாளில், போரே கவுடா மாரடைப்பால் உயிரிழந்தார்.இதனால், அந்த திருமணமும் தள்ளி வைக்கப்பட்டது. ஒரே வாரத்தில், பத்ராவதியில் பாட்டி மற்றும் தந்தை மரணங்களால், இரண்டு திருமணங்கள் நின்று போனது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.