உக்ரைனுக்கு அருகில் தயாராக நிற்கும் ரஷ்ய படைகள்: வெளியான செயற்கைக்கோள் புகைப்படங்கள்


போர் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், உக்ரைனுக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ள ரஷ்யாவின் பாரிய இராணுவப் படையின் செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கான சாத்தியம் அதிகரித்து வருவதால், மிகப்பெரிய போர் நடப்பதற்கான பதற்றமும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ரஷ்ய இராணுவம் ன்பெலாரஸ், ​​கிரிமியா மற்றும் மேற்கு ரஷ்யாவில் அதன் பிரம்மாண்ட படைகளை குடுவித்துள்ளது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக கிரிமியா, பெலாரஸ் மற்றும் மேற்கு ரஷ்யாவின் சமீபத்திய செயற்கைக்கோள் படங்களை Maxar வெளியிட்டுள்ளது. அதில், குறித்த பிராந்தியம் முழுவதும் பல குறிப்பிடத்தக்க புதிய படைகள் வரிசைப்படுத்தபட்டுள்ளது தெளிவாக தெரிகிறது.

கிரிமியாவில், பிப்ரவரி 10 அன்று Oktyabrskoye விமானநிலையத்தில் புதிதாக துருப்புக்கள் மற்றும் உபகரணங்களின் ஒரு பெரிய புதிய வரிசைப்படுத்தல் காணப்பட்டது. சிம்ஃபெரோபோலுக்கு வடக்கே கைவிடப்பட்ட இந்த விமானநிலையத்திற்கு 550-க்கும் மேற்பட்ட துருப்புக் கூடாரங்களும் நூற்றுக்கணக்கான வாகனங்களும் வந்துள்ளன.

அதேபோல், டோனுஸ்லாவ் ஏரியின் கரையில் உள்ள Novoozernoye மற்றும் கிரிமியன் தீபகற்பத்தின் வடமேற்கு கடற்கரையில் உள்ள Slavne நகருக்கு அருகிலும் சமீபத்தில் அங்கு விரிவான பீரங்கி வரிசைப்படுத்தல் மற்றும் பயிற்சி நடவடிக்கைகள் காணப்பட்டன.

பெலாரஸில், உக்ரைனின் எல்லையில் இருந்து 25 கிமீ தொலைவில் உள்ள கோமலுக்கு அருகிலுள்ள சியாப்ரோவ்கா விமானநிலையத்தில் துருப்புக்கள், இராணுவ வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் புதிய வரிசைப்படுத்தல் அடையாளம் காணப்பட்டது.

கூடுதலாக, துருப்புக்கள் மற்றும் பல போர்க் குழுக்கள், உக்ரைனின் எல்லையில் இருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ள ரெசிட்சா நகருக்கு அருகே களத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

மேற்கு ரஷ்யாவில், சமீபத்தில் உக்ரைனின் எல்லைக்கு கிழக்கே சுமார் 110 கி.மீ. தொலைவில் உள்ள குர்ஸ்க் பயிற்சிப் பகுதிக்கு துருப்புக்கள் மற்றும் இராணுவப் படைகளின் ஒரு பெரிய அணிவகுப்பு வந்துள்ளது. அப்பகுதிக்கு கூடுதல் உபகரணங்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன, மேலும் துருப்புக்கள் மற்றும் உபகரணங்களுக்கு இடமளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

Gallery

GallerySource link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.