எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இராமேஸ்வரத்தை சேர்ந்த 11 மீனவர்களை சிறைபிடித்தது இலங்கை கடற்படை <!– எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இராமேஸ்வரத்தை சேர்ந்த 11 மீன… –>

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 11 மீனவர்களை படகுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர்.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களையும், 2 விசைப்படகுகளையும் சிறைபிடித்து தலைமன்னார் கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

கடந்த வாரம் ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 11 மீனவர்கள் மற்றும் 3 விசைப்படகுகள் சிறைபிடிக்கப்பட்ட நிலையில், மேலும் 11 பேர் சிறைபிடிக்கப்பட்டிருப்பது மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.