ஒரே நாடு ஒரு பதிவு திட்டத்திற்கு எதிர்ப்பு : முதல்வர் ஸ்டாலின் கூறுவது என்ன?

Tamilnadu News Update : மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு, தேசத்தின் மீது தனது சிந்தாந்தத்தை திணிப்பதன் மூலம் கூட்டாட்சி முறைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த பிப்ரவரி 1-ந் தேதி நடைபெற்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில,  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் “ஒரே நாடு-ஒரே பதிவு” என்ற திட்டத்தை அறிவித்தார். ஆனால் இந்த முயற்சிக்கு எதிர்கட்சிகள் தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், புதிய கல்விக் கொள்கை மற்றும் “ஒரே நாடு-ஒரே பதிவு” போன்ற முழக்கங்கள் மற்றும் மத்திய அரசின் சமீபத்திய நடவடிக்கைக்கு முதல்வர் ஸ்டாலின் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நகர்புறஉள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் என பலரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தி் ஈடுபட்டு வருகின்றனர். அதில் தமிழகத்தில் ஆளும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகயைில், திருப்பூரில் நடந்த மெய்நிகர் தேர்தல் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஸ்டாலின், மாநில சுயாட்சி மற்றும் மத்தியில் கூட்டாட்சி என்ற இந்த முழக்கத்தை இந்தியா முழுவதும் ஒலிக்கச் செய்வேன் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசின் ஒரே நாடு ஒரே பதிவு மற்றும் புதிய கல்வி கொள்ளை உள்ளிட்ட பல முயற்சிகள் “நாட்டை ஒரு ஒற்றையாட்சி நாடாக மாற்றும் முயற்சியாக உள்ளது. இதனால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. அதனால்தான் இந்தியா மலர வேண்டும் என்றால் மாநில சுயாட்சி வேண்டும். அதையேதான் நாங்கள்  வலியுறுத்துகிறோம். “மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற திமுகவின் சித்தாந்ததை மீண்டும் வலியுறுத்துகிறோம் என்று கூறியுள்ளார்.

மேலும், “சமூக நீதி மற்றும் மாநில சுயாட்சி ஆகியவை திராவிட இயக்கம் இந்த நாட்டிற்கு வழங்கிய மகத்தான சித்தாந்தங்கள். நாடு முழுவதும் சமூக நீதி மலர வேண்டும் என்பதை உறுதி செய்யும் பணியில் நான் என்னை அர்ப்பணித்துள்ளேன். கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் வகையில் 50க்கும் மேற்பட்ட தலைவர்களுக்கு ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளதாகவும், காங்கிரஸ் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் மற்றும் பல மாநில அமைப்புகள் இந்த முயற்சியில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 5 மாநில தேர்தல் முடிந்ததும் இது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை தொடங்கும் என்றும், தேசத்தின் கூட்டாட்சி உணர்வின்படி மத்திய அரசு செயல்பட்டு மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் ஆனால் பாஜக தலைமையிலான அரசு மாநிலங்களின் அனைத்து அதிகாரங்களையும் பறிக்கும் சூழலை உருவாக்கி வருவதால், கூட்டாட்சி இன்று அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது,” குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் பல மக்கள் விரோதக் கொள்கைகளின் மூலம் இது தெளிவாகிறது என்று முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.