சேலையில் பார்த்த கண்ணம்மா இல்லை… இது அடுத்த பரிணாமம்…! #Photo Gallery

Serial Actress Vinusha Devi Photo Gallery Update : சமூக வலைதளங்களின் மூலம் பிரபலமாகி தற்போது முன்னணி சீரியல் நடிகையாக உருவெடுத்துள்ளவர் வினுஷா தேவி.

டிக்டாக் போன்ற செயலிகள் மூலம் பலர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளனர். தனது நடிப்பு திறமைக்கு அங்கிகாரம் கிடைக்காத பலரும் தங்களது திறமையை இதில் வெளிகாட்டி வந்தனர்.

ஆனால் ஒரு கட்டத்தில் டிக்டாக் போன்ற பல்வேறு செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு சமூகவலைதள பிரபலங்கள் பலரும் யூடியூப் சேனலில் தங்களை ப்ரமோட் செய்ய தொடங்கினர்.

இதில் ஒரு சிலர் சின்னத்திரையில் சீரியல் வாய்ப்பு பெற்று நடித்து வருகின்றனர். அந்த வகையில் சமூகவலைதளங்களின் மூலம் சீரியலில் என்ட்ரி ஆனவர் வினுஷா தேவி.

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இதில் நடித்து வந்த நாயகி ரோஷ்னி ஹரிப்பிரியன் திடீரென சீரியலை விட்டு விலகினார்.

இதன்பிறகு கண்ணம்மா ரோலில் யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில், அந்த வாய்ப்பை வினுஷா தேவி தட்டிச்சென்றுள்ளார்.

தொடக்கத்தில் இவரை ஏற்றுக்கொள்ளாத ரசிகர்கள் தற்போது பாரதி கண்ணம்மா சீரியலின் முக்கிய அங்கமாக வினுஷா மாறியுள்ளதாக கூறி வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் வினுஷா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

மேலும் பல போட்டோஷூட்களையும் நடத்தி அந்த புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்.  இந்த பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதுவரை பாரதி கண்ணம்மா சீரியலில் சேலையில் பார்த்து பழகிய வினுஷா தேவி தற்போது மாடர்ன் உடையில் அசத்தலாக போஸ் கொடுத்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.