தமிழ்ப்பெண்ணை மணக்கும் அவுஸ்திரேலிய கோடீஸ்வர பிரபலம்! வெளியான தமிழ் பாரம்பரிய மஞ்சள் நிற பத்திரிக்கை


அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் க்ளென் மேக்ஸ்வெல் தமிழ் பெண்ணை திருமணம் செய்யவுள்ள நிலையில் அவர்களின் திருமண பத்திரிக்கை வைரலாகியுள்ளது.

ஆல்ரவுண்டராக அவுஸ்திரேலிய அணியில் அதிரடி காட்டுபவர் க்ளவுன் மேக்ஸ்வெல்.
ஆர்சிபி அணிக்காக கடந்தாண்டு ஐபிஎல்லில் ஆடிய மேக்ஸ்வெல்லை அந்த அணியே மீண்டும் தக்கவைத்துள்ளது.

மேக்ஸ்வெல்லின் நிகர சொத்து மதிப்பு ரூ 218 கோடி (இலங்கை மதிப்பில்) என கணக்கிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேக்ஸ்வெல் அவுஸ்திரேலியா வாழ் தமிழ் பெண்ணான வினி ராமன் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இதையடுத்து, அவர்களுக்கு இந்திய முறைப்படி 2020ம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது.
கொரோனா பரவல் காரணமாக அவர்களின் திருமணம் நடப்பதில் தாமதம் ஆனது.

இந்த நிலையில் தற்போது மார்ச் 27ம் திகதி மேக்ஸ்வெல் – வினி ராமன் தம்பதிகளின் திருமணம் நடைபெற உள்ளது.
இவர்களது திருமண அழைப்பிதழ் தமிழ் முறைப்படி மஞ்சள் நிறத்தில் அச்சிடப்பட்டுள்ளது.

திருமண பத்திரிகை பாரம்பரிய முறைப்படி மஞ்சள் நிற பத்திரிக்கையில் தமிழில் அச்சிடப்பட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.