தேனி: பெண் வனக்காப்பாளர் கொலை; சரணடைந்த ஆயுதப்படை காவலர் – நடந்தது என்ன?!

மதுரை சதாசிவம் நகர் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் பொன்பாண்டி மனைவி ரம்யா (27) (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இவர் தேனி வனச்சரக அலுவலகத்தில் வனக்காவலராகப் பணிபுரிந்து வருகிறார். போடியில் வனத்துறை அலுவலகம் அருகே ரமேஷ் என்பவரின் வீட்டில் வசித்து வந்தார். ரம்யாவுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், 4 ஆண்டுகளுக்கு முன்பு இவரின் கணவர் சாலை விபத்தில் இறந்துவிட்டார். அதனால், இவருடைய 2 பெண் குழந்தைகளும் அவரின் பெற்றோர் வீட்டில் உள்ளனர்.

இந்நிலையில், தனியாக வசித்து வந்த ரம்யாவைக் கொலை செய்துவிட்டதாக மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த வேலாயுதம் மகன் திருமுருகன் (27) என்பவர் மதுரை கீரைத்துறை காவல் நிலையத்தில் ஞாயிறுக்கிழமை அதிகாலை சரணடைந்தார். இதனையடுத்து கீரைத்துறை போலீஸார் அளித்த தகவலின் பேரில், போடி நகர் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் மற்றும் போலீஸார் போடியில் ரம்யா வசித்து வந்த வீட்டில் சென்று பார்த்தனர். அங்கு ரம்யா கழுத்து நெரித்துக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததார். திருமுருகன்தான் கொலை செய்தார் என்பதை உறுதி செய்த போடி நகர் காவல் நிலையப் போலீஸார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கொலை

இதுகுறித்து போலீஸாரிடம் விசாரித்தோம். “ரம்யாவும், திருமுருகனும் சில ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறையில் சேருவதற்காக பயிற்சி வகுப்புக்கு சென்றதில் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து ரம்யா வனத்துறையில் வனக்காப்பாளராக சேர்ந்து போடியில் வசித்து வந்தார். திருமுருகன் மதுரை ஆயுதப்படை காவல் பிரிவில் சிறப்பு காவலராகவும் பணியில் சேர்ந்தார்.

கைது

திருமுருகனுக்கும் திருமணமான நிலையில் ரம்யாவுடன் அவருக்கு பழக்கம் இருந்ததை அறிந்த அவரின் மனைவி திருமுருகனைப் பிரிந்து சென்றுவிட்டார்.

இதனையடுத்து திருமுருகன் அடிக்கடி போடிக்கு வந்து ரம்யா வீட்டில் தங்கிவிட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் பிப்ரவரி 12-ம் தேதி இரவு திருமுருகன் ரம்யாவைச் சந்திக்க வந்துள்ளார். அவர்களுக்குள் திருமணம் செய்வது தொடர்பாக பேசியபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் திருமுருகன் ரம்யாவைக் கழுத்தை கொலை செய்துள்ளார்” என்றனர்.

Also Read: தேனி: சிறுமிகளுக்கு மிட்டாய் கொடுத்து அழைத்த நபர்; கட்டிவைத்து அடித்த மக்கள் – என்ன நடந்தது?!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.