நடிப்பதால் குழந்தைகளை பழக விடமாட்டார்கள் – நித்யா ரவீந்திரன்!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருபவர் நடிகை நித்யா ரவீந்திரன். இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் சினிமாவில் நடித்த காரணத்தால் தனது குழந்தை பருவத்தில் நடந்த சில மோசமான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், 'எல்லா குழந்தைகளும் பள்ளி முடிந்து விளையாட செல்வார்கள். நான் நாடகம் நடிக்க சென்று விடுவேன். நான் நடிக்கிறேன் என்ற காரணத்தால் நான் பொய் பேசுவேன் என சொல்லி என்னிடம் வீட்டு குழந்தைகளை பழக விடமாட்டார்கள். ஆனால் குழந்தைகள் எல்லோருக்கும் என்னோட வயது என்பதால் அவர்கள் என்னிடம் உண்மையை போட்டு உடைத்து விடுவார்கள். அந்த காலத்தில் நடிகர், நடிகைகள் பற்றி அவ்வளவு சின்னத்தனமாக புத்தி கொண்டவர்கள் இருந்திருக்கிறார்கள்' என வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார்.

நித்யா ரவீந்திரன் மேடை நாடகங்களில் நடித்து அதன் பின் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 45 ஆண்டுகளில் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரைகளில் சிறந்த குணச்சித்திர நடிகையாக அறியப்படுகிறார். மேலும், தமிழ் எஃப் எம் ஒன்றுக்கு இயக்குநராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.