மச்சக்காரன்ப்பா மக்கள் செல்வன் …!பாகுபலி ரேஞ்சில் டெரெண்டாகும் KRK போஸ்டர்…!

விஜய்சேதுபதி,
சமந்தா
, நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின்
டீசர்
ஒரே நாளில் ஒரு கோடி வியூஸ் கடந்து சக்கைப்போடு போட்டு வருகிறது.ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கி உள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் டீசர் முழுக்க முழுக்க ஃபன் ரைடாகத் தான் உள்ளது.

சமந்தா மற்றும் நயன்தாராவிடம் ஒரே நேரத்தில் மாற்றி மாற்றி காதலை சொல்லும் இடத்திலேயே
விஜய்சேதுபதி
கம்பேக் கொடுத்து விட்டார்.காத்துவாக்குல ரெண்டு காதல் படம் காதலர் தின ஸ்பெஷலாக இம்மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன் டீசர் வெளியாகி உள்ளது. விஜய்சேதுபதி, சமந்தா மற்றும் நயன்தாரா நடிப்பில் ஏகப்பட்ட நாஸ்டாலஜிக் விஷயங்களுடன் உருவாகி உள்ள இந்த படம் வரும் ஏப்ரல் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

வெளியானது அரபிக் குத்து போஸ்டர்..!வித்யாசமான கெட்டப்பில் விஜய்..!

விஜய்சேதுபதி பெட்டில் நடுவே படுத்திருக்க இந்த பக்கம் நயன்தாரா அந்த பக்கம் சமந்தா என இருவரும் மாற்றி மாற்றி அவரை இடிக்கும் காட்சிகள் ரசிகர்களை காண்டாக்கி வருகிறது. மேலும், ஏகப்பட்ட ட்ரோல் மீம்களும் அந்த குறிப்பிட்ட காட்சிக்கு பறந்து வருகின்றன. மச்சக்காரன்ப்பா மக்கள் செல்வன் என இளைஞர்களும் சக நடிகர்களும் பொறாமைப்பட்டு வருகின்றனர்.

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் டீசர் பிப்ரவரி 11ம் தேதி மாலை வெளியான நிலையில், பிப்ரவரி 12ம் தேதி மாலைக்குள் 1 கோடி வியூஸ்களை யூடியூபில் கடந்து மின்னல் வேகத்தில் டிரெண்டாகி வருகிறது. அதற்காக புதிய போஸ்டரை வெளியிட்ட விக்னேஷ் சிவன் தனது சந்தோஷத்தையும் வெளிப்படுத்திஉள்ளார்.

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் டீசர் பிப்ரவரி 11ம் தேதி மாலை வெளியான நிலையில், பிப்ரவரி 12ம் தேதி மாலைக்குள் 1 கோடி வியூஸ்களை யூடியூபில் கடந்து மின்னல் வேகத்தில் டிரெண்டாகி வருகிறது. அதற்காக புதிய போஸ்டரை வெளியிட்ட விக்னேஷ் சிவன் தனது சந்தோஷத்தையும் வெளிப்படுத்தி உள்ளார்.

அகில உலக சூப்பர்ஸ்டார் சிவா நடிப்பில் வெளியான தமிழ்ப்படம் பாகங்களை போல ஒருவேளை காத்துவாக்குல ரெண்டு காதல் படம் இருக்குமா? என்கிற கேள்வியையும் இப்படி வித விதமாக மற்ற படங்களை இமிடேட் பண்ணும் காட்சிகள் வெளியாகி வருவதை பார்த்த ரசிகர்கள் தமிழ்ப்படம் 3 எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மீண்டும் தலைதூக்கும் உதயநிதி..! எந்த எந்த படங்கள் தெரியுமா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.