மனைவியை வைத்து கொள்ளையடித்த கணவன்.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்.!

பலபேரை விஷ ஊசி போட்டு கொலை செய்து பணம், நகை உள்ளிட்டவற்றை கொள்ளையடித்த தம்பதியினரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையை சேர்ந்த 45 வயதான ஸ்டீபன் மற்றும் அவரது மனைவி அமலோற்பவம் ஆகிய இருவரும் ஒரு சீரியல் கில்லர். இவர்கள் இருவரும் பணத்துக்காக எதையும் செய்யக்கூடியவர்கள். இவர்கள் இதுவரை சென்னையில் மட்டும் விஷ ஊசி செலுத்தி 8 பேரை கொலை செய்துள்ளனர்.

இவரது மனைவி அமலோற்பவம் பல டாக்டர்களிடம் உதவியாளராக பணிபுரிந்து பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த தம்பதியினர் இருவரும் மும்பை சென்று அங்குள்ள ஒரு திருட்டுக் கும்பலிடம் விஷ ஊசி கொலை டெக்னிக்கை கற்றுக் கொண்டு வந்துள்ளனர்.

குழந்தைகள் விளையாடும் பொம்மை துப்பாக்கி போன்று விஷ ஊசி பொருத்தி சுடும் வகையிலான துப்பாக்கிகளை அந்த கும்பலிடம் வாங்கி வந்துள்ளனர். தூக்க மாத்திரை கலந்த திரவத்தை ஊசியில் செலுத்தி துப்பாக்கியில் பொருத்தி ஒருவர் மீது செலுத்தினால் எறும்பு கடிப்பது போன்ற சிறு வலி உணர்வுடன் அந்த ஊசி மனித உடலில் குத்திய உடன் சம்பந்தப்பட்ட நபர் அடுத்த இரு நிமிடங்களில் மயக்கம் அடைந்து விடுவார்.

பின்னர் அந்த நபரை கடத்திக் கொன்று பணம் நகை உள்ளிட்டவற்றை கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் கோவையில் ஓட்டுநர் கொலை செய்து பணத்தை கொள்ளையடித்துள்ளனர். அதன் பிறகு இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து இரண்டு ஊசி துப்பாக்கி, எண்ணற்ற மொபைல்போன் மற்றும் காலி ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தற்போது அந்த தம்பதியிடம் மேற்கொண்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.