மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நாளை வகுப்புக்கள் தொடக்கம்

சென்னை

நாளை முதல் மருத்துவக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புக்கள் தொடங்குகிறது/

தமிழக மருத்துவக் கல்வி இயக்ககம் அனைத்து வருத்துவக் கல்லூரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.  அந்த சுற்றறிக்கையில், “நாளை முதல் தேசிய மருத்துவ ஆணையம் வழிகாட்டுதல் படி, 2021- 22ம் ஆண்டில் மருத்துவ  படிப்பில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்க வேண்டும். மேலும் கல்லூரி விடுதிகளில் கொரோனா தடுப்பு  நடவடிக்கைகள் பின்பற்ற வேண்டும்.

உணவு கூடங்களில் 50 சதவீதம்  மட்டுமே, மாணவர்கள் இருக்க வேண்டும்.  கல்லூரி நூலகத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்க  வேண்டும், விழாக்கள், கூட்டங்கள் எதுவும் அனுமதியின்றி எதுவும் நடத்தக்கூடாது. அனைத்து கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளையும் வகுப்பறைகளில்  எல்லா மாணவர்களும் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.

இந்த வருடம் அரசு  பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில் இடம் பெற்ற  மாணவர்களிடம் கல்வி கட்டணம், சிறப்பு கட்டணம், தேர்வு கட்டணம், உணவு உட்பட  விடுதி கட்டணம், புத்தகங்கள், வெள்ளை அங்கி, ஸ்டெதஸ்கோப், பல்கலை பதிவு  கட்டணம், காப்பீடு உள்ளிட்ட எந்தவித கட்டணமும் வசூலிக்க கூடாது.

சென்ற ஆண்டு பின்பற்றப்பட்ட அதே நடைமுறையையே இந்தாண்டும் பின்பற்ற வேண்டும்.  இந்த அரசு  பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பிற்கான அனைத்து கட்டணங்களையும் அரசே ஏற்பதால் அவர்கள் எந்தவித உதவி தொகைக்கும் விண்ணப்பிக்க வேண்டாம்”. எனக் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.