முதல் லாட்டரி சீட்டிலேயே ₹35 கோடி; ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆன பெண்மணி!

இங்கிலாந்தில் வசிக்கும் ஒரு தம்பதிக்கு அதிர்ஷ்டம் என்பது கூரை பிய்த்து கொண்டு கொட்டியுள்ளது. கணவர் பல வருடங்களாக தொடர்ந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்தார். ஆனால் தற்போது வரை லாட்டரியில் இருந்து ஒரு ரூபாய் கூட வெல்ல முடியவில்லை. ஆனால்,  மனைவி முதல் முறையாக லாட்டரி சீட்டை வாங்கி முதல் முறையாக ₹35 கோடி மதிப்புள்ள பங்களாவை வென்றார்.

பென் என்ற நபர் பல ஆண்டுகளாக ஓமேஸின் லாட்டரியை வாங்கும் பழக்கம் இருந்தது. இருந்தாலும் இந்த முறை லாட்டரி வாங்க மறந்துவிட்டார். இதை அடுத்து, அவரது 32 வயது மனைவி பெக்காவுக்கு திடீரென்று கணவர் வழக்கமாக லாட்டரி வாங்குவது நினைவுக்கு வந்தது. தனது கணவர் ஒமேகாவிற்கு உதவும் நோக்கில் மனைவி பெக்கா பாட் தனது கணவருக்கு தெரிவிக்காமல் 1000 ரூபாய் லாட்டரியை வாங்கியுள்ளார். இது கணவன் மனைவி இருவரின் வாழ்க்கையில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது.

மேலும் படிக்க |  ’ரூ.3,200 கோடி பரிசு’ மெகா மில்லியனரை தேடும் லாட்டரி நிறுவனம்..!

வெறும் 1000 ரூபாய் லாட்டரியில் அடைந்த பரினால், 2 படுக்கை அறை கொண்ட பிளாட்டில் இருந்து நேரடியாக ₹35 கோடி மதிப்புள்ள பங்களா கிடைத்ததாகவும், கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த பங்களாவின் உரிமையாளரானதாகவும் மனைவி பரவசத்துடன் கூறினார். பெக்கா சமீபத்தில் ஒரு குழந்தைக்கு தாயானார் என்பதால், அவர் பணியில் இருந்து விடுப்பு எடுத்துள்ளார். அவரது கணவர் தவறாமல் ஒவ்வொரு முறையும் ஓமேஸ் லாட்டரியை வாங்குவார். ஆனால், இம்முறை வேலை பளு காரணமாக டிக்கெட் வாங்க மறந்துவிட்டார். 

எனவே மனைவி ஆன்லைனில் டிக்கெட் வாங்கினார். இதுபற்றி அவர் கணவரிடம் தெரிவிக்கவில்லை. இருப்பினும், லாட்டரியைத் திறந்து அவளுடைய எண்ணைப்  உள்ளிட்ட போது, ​​மனைவிக்கு வானத்தில் பறப்பதை போல் உணர்ந்தாள். அதன் பிறகு அந்த தம்பதி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இருவரும் 35 கோடி மதிப்புள்ள ஆடம்பரமான பங்களாவை வென்ற அந்த தம்பதி, இனி மகளின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று மகிழ்ச்சியுடன் கூறினர்.

மேலும் படிக்க | ஜாக்பாட்! ஒரே நாளில் ரூ.1 கோடிக்கு அதிபதியான ஆம்புலன்சு டிரைவர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.