வேலையில்லா பட்டதாரிகளுக்கு குறுகிய கால இலவச பயிற்சி.!

வேலையில்லா பட்டதாரிகளுக்கு தமிழக அரசின் திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் வேலை வாய்ப்பிற்கான இலவச பயிற்சி அடுத்த வாரம் முதல் தொடங்கப்பட உள்ளன.

இது தொடர்பாக மங்கள்யான் தொழில்நுட்ப தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் மங்கள்யான் தொழில்நுட்ப தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கம் இணைந்து ஜி.எஸ்.டி. கணக்கு நிர்வாக உதவியாளர், அக்கவுண்ட்ஸ் நிர்வாகி பயிற்சிகள் உள்ளிட்ட குறுகிய கால பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. அம்பத்தூரில் உள்ள மகாகவி பாரதியார் நகர் சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் உள்ள பயிற்சி வளாகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இலவச பயிற்சிகளை முடித்தவர்களுக்கு தமிழக அரசின் சான்றிதழுடன், வேலையில் சேர்வதற்கான உதவிகளையும், சுய தொழில் தொடங்குவதற்கு தேவையான உதவிகளையும் பயிற்சி மையம் மூலமாக வழங்கப்படும் எனவும், மேலும் இந்த பயிற்சியில் சேர்பவர்கள் வந்து செல்லும் போக்குவரத்து செலவை தமிழக அரசே வழங்குகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண், பெண் இருபாலரும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் எனவும், உதவிக்கு 9869041169 என்ற எண்ணிலும், [email protected] என்ற இ-மெயில் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் எனவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.