அன்பிற்கும் உண்டோ… அதிக விலை கொடுத்து அன்பை வெளிப்படுத்திய சிஎஸ்கே, மும்பை அணிகள்!

IPL Auction Tamil News: ‘நீங்கள் யாரையாவது நேசித்தால் அவர்களைப் போக விடுங்கள், அவர்கள் திரும்பி வந்தால், அவர்கள் உங்களுடையவர்கள்’ என்கிற வரிகளை காஸ்மிக் மஸ் என்ற தலைப்பில் எழுத்தாளர் ரிச்சர்ட் பாக் எழுதிழுதுகிறார். அவர் இப்படி குறிப்பிட்டது ஐ.பி.எல். ஏலத்தில் கலந்து கொண்ட எந்த அணிக்கு சரியாக பொருந்தியதோ இல்லையோ, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் முறையாக பொருந்தியது. இதேபோல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளும் சரியாகவே பொருந்தியது.

அதிக விலை கொடுத்து அன்பை வெளிப்படுத்திய சென்னை – மும்பை அணிகள்

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, விக்கெட் கீப்பர் வீரர் இஷான் கிஷனை ரூ. 15.25 கோடிக்கு வாங்கியது. இதன்மூலம் இஷான் கிஷன் ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். மேலும், அந்த அணியால் 12 கோடிக்கு தக்கவைக்கப்பட்ட ஜஸ்பிரித் பும்ராவை விட அதிக சம்பளம் பெறும் வீரர் என்கிற அந்தஸ்தையும் பெற்றார்.

இதேபோல் நான்கு முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹருக்காக ரூ.14 கோடி செலவழித்து, அந்த அணியின் கேப்டன் எம்.எஸ். தோனியை விட அதிக விலை கொடுத்து, ரூ.12 கோடிக்கு வாங்கியது. மேலும், முதல் நாள் ஏலத்தில் அந்த அணி ஆறு வீரர்களை எடுத்தது. அவர்களில் ஐந்து பேர் கேஎம் ஆசிஃப் உட்பட ரூ. 20 லட்சத்திற்கு அந்த அணிக்காக ஏற்கனவே விளையாடியவர்கள் அல்லது கடந்த சீசன்களில் அணியில் இடம்பிடித்து இருந்தவர்கள்.

மறுபுறம் 48 கோடிகளுடன் ஏலத்தில் பங்கேற்க மும்பை அணி 4 வீரர்களை வாங்கி இருந்தது. இதில் இஷான் கிஷானை திரும்பக் கொண்டுவர, பர்ஸில் இருந்த பணத்தில் மூன்றில் ஒரு பங்கை அவருக்காக செலவழித்தது. ஒரு ‘கீப்பர்-பேட்ஸ்மேன் ஒப்பனராக அணியில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என நினைத்த அந்த அணி இந்த அளவிற்கு சென்றுள்ளது.

பொதுவாக ஏலத்தில் சென்னை அணி ரூ.10 கோடியை தாண்டி ஏலம் கேட்காது. ஆனால், ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் மற்றும் பவர்பிளேயில் சிறப்பாக பந்து வீசக்கூடிய ஒருவரை தவற விடக்கூடாது என்கிற நோக்கில் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹரை 14 கோடிகள் கொடுத்து அணியில் திரும்ப சேர்த்துள்ளது. சென்னை அணியில் கவனிக்கூடிய விடயம் என்னவென்றால், அவர்கள் எப்போதும் தங்களின் திட்டம் படி செல்லக்கூடியவர்கள். மேலும், அவர்கள் எந்த வீரர் மீது நம்பிக்கை வைக்கிறார்களோ அவரை எப்படியாவது அணி வசம் சேர்த்து விடுவார்கள். இதற்கு சமீபத்திய உதாரணமாக தீபக் சாஹரையும், மிகப்பழைய உதாரணமாக கேப்டன் தோனியையும் (2008 ஏலம்) குறிப்பிடலாம்.

நேற்றைய ஏலத்தில் சென்னை அணி அதன் ‘கோர் அணியை’ தக்கவைத்துக் கொள்வதில் கவனம் செலுத்தியது. இதனால் அம்பதி ராயுடு ரூ.6.75 கோடிக்கும், டுவைன் பிராவோ ரூ.4.4 கோடிக்கும், ராபின் உத்தப்பா ரூ.2 கோடிக்கும் முந்திக்கொண்டு எடுத்தது. ஆனால், ஏலப் போட்டியால் ஃபாஃப் டு பிளெசிஸ் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் முறையே ரூ. 7 கோடி மற்றும் 7.75 கோடிக்கு இழந்தது.

சென்னை அணி ஏற்கவே தோனி, ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் மொயீன் அலி ஆகியோரைத் தக்க வைத்துக் கொண்டது, மேலும் அவர்களது ஏலத் தேர்வு அவர்களின் பழைய அணியின் முக்கிய இடத்தை மீண்டும் உறுதி செய்தது.

ரோஹித் ஷர்மா, ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ் மற்றும் கீரன் பொல்லார்ட் ஆகியோரைத் தக்கவைத்துக் கொண்டதன் மூலமும், கிஷான் கிஷனை அணியில் மீண்டும் இணைத்ததன் மூலமும் மும்பை அணி வலுவான நிலையிலே உள்ளது.

கொல்கத்தா அணியில் கேப்டன் ஆகப்போவது யார்?

கொல்கத்தா அணி நேற்றைய ஏலத்தில் ஷ்ரேயாஸ் ஐயரை 12.25 கோடிக்கு வாங்கியது. மேலும், பாட் கம்மின்ஸ் (ரூ. 7.25 கோடி), நிதிஷ் ராணா (ரூ. 8 கோடி), ஷிவம் மாவி (ரூ. 7.25 கோடி) மற்றும் ஷெல்டன் ஜாக்சன் (60 லட்சம்) ஆகிய வீரர்களையும் அந்த அணி வாங்கியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கொல்கத்தா அணி கம்மின்ஸை ரூ.15.50 கோடிக்கு வாங்கியது. ஆனால் இம்முறை அவரை மிகக் குறைந்த விலையில் பெற்றுள்ளது.

ஷ்ரேயாஸ் ஐயர் உடன் கம்மின்ஸும் கேப்டனுக்கான ஒரு தேர்வாக இருப்பார். மிக முக்கியமாக, தக்கவைக்கப்பட்ட வீரர்களில் ஆண்ட்ரே ரஸ்ஸல், வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் போன்றோரை அந்த அணி ஏலத்தில் விடாததது, அணிக்கு முதுகெலும்பாக இருக்கும்.

ஹர்ஷல் படேலை தக்கவைத்த பெங்களூரு

கடந்த ஆண்டு 32 விக்கெட்டுகளுடன் பர்பிள் கேப் ஹோல்டராக இருந்த ஹர்ஷல் படேலை ரூ. 10.75க்கு பெங்களுரு அணி திரும்பக் கொண்டு வந்தது. இலங்கையின் லெக் ஸ்பின்னர் வனிந்து ஹசரங்காவுக்கு ரூ.10.75 கோடியும், கடந்த சீசனில் அணியின் அமைப்பில் இருந்த ஆல்-ரவுண்டர் ஷாபாஸ் அகமதுவுக்கு ரூ.2.4 கோடியும் அந்த அணி செலவிட்டது.

மெகா ஏலத்திற்கு முன்னதாக, RCB இன் கிரிக்கெட் நடவடிக்கைகளின் இயக்குனர் மைக் ஹெஸ்சன், அவர்களின் வளர்ச்சியைத் தொடர அவர்களின் பழைய வீரர்களில் சிலரை மீண்டும் கொண்டு வருவது குறித்து பேசியிருந்தார்.

புவனேஷ்வர் குமார் மற்றும் டி நடராஜன் ஆகியோர் முறையே ரூ.4.2 கோடி மற்றும் ரூ.4 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு திரும்பி எடுத்தது. இரண்டு புதிய அணிகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் சில புத்திசாலித்தனமாக வாங்கியது. கவுதம் கம்பீர் அணிக்கு வழிகாட்டியாக இருந்தார்.

தென்னாப்பிரிக்காவின் ‘கீப்பர்-பேட்ஸ்மேன்’ டி காக்கின் தாக்கத்தை கருத்தில் கொண்டு ரூ.6.75 கோடிக்கு வாங்கினார். இதேபோல் மணீஷ் பாண்டே (ரூ. 4.6 கோடி), ஜேசன் ஹோல்டர் (ரூ. 8.75 கோடி), தீபக் ஹூடா (ரூ. 5.75 கோடி), க்ருனால் பாண்டியா (ரூ. 8.25 கோடி), மார்க் வுட் (ரூ. 7.50 கோடி), அவேஷ் கான் (ரூ. 10) ஆகியோரையும் வாங்க திட்டம் வகுத்து கொடுத்தார்.

அணிகள் அதிக விலை கொடுத்து வாங்கிய வீரர்கள் பட்டியல்:

மும்பை இந்தியன்ஸ்

15.25 கோடிக்கு இஷான் கிஷன்: கிஷன் ஆக்ரோஷமான தொடக்க ஆட்டக்காரராகவும் விக்கெட் கீப்பராகவும் பொருந்துகிறார்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

தீபக் சாஹர் ரூ. 14 கோடிக்கு: பவர்பிளே ஸ்பெஷலிஸ்ட் மற்றும் சிறந்த ளோ – ஆர்டர் பேட்ஸ்மேன். அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சு விருப்பமாகவும் சாஹர் இருந்துள்ளார்.

டெல்லி கேபிட்டல்ஸ்

ஷர்துல் தாக்குர் ரூ. 10.75 கோடி: ஷர்துல் பார்ட்னர்ஷிப்-பிரேக்கராகவும், பேட்ஸ்மேனாக ஆர்டரைக் குறைக்கும் ஆட்டத்தை மாற்றியவராகவும் தாமதமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளார்.

கொல்கத்தா

12.25 கோடிக்கு ஷ்ரேயாஸ் ஐயர்: கொல்கத்தா அணியில் கேப்டன் பதவி காலியாக உள்ள நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் முக்கிய தேர்வாக இருக்கலாம்.

ஐதராபாத்

8.75 கோடிக்கு வாஷிங்டன் சுந்தர்: பவர்பிளேயில் பந்துவீசக்கூடிய ஒரு ஆஃப் ஸ்பின்னர் மற்றும் ஆர்டரைக் குறைக்கும் திறமையான பேட்ஸ்மேன்.

ஆர்சிபி

ஹர்ஷல் படேல் மற்றும் வனிந்து ஹசரங்க, இருவரும் ரூ. 10.75 கோடிக்கு வாங்கியுள்ளது.

பஞ்சாப் கிங்ஸ்

காகிசோ ரபாடா ரூ 9.25 கோடி, ஷாருக் கான் ரூ 9 கோடி: ரபாடா வேகப்பந்து வீச்சு ராயல்டி, அதே சமயம், கான் ஃபினிஷராக தனது நற்பெயரை உயர்த்திக் கொண்டுள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ்

பிரசித் கிருஷ்ணா ரூ. 10 கோடிக்கு: இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஒருநாள் போட்டித் தொடர் வேகப்பந்து வீச்சாளராக தனது பங்கை மேம்படுத்தியது.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

ரூ. 10 கோடிக்கு அவேஷ் கான்: விக்கெட் வீழ்த்தியவர், கடந்த ஆண்டு ஐபிஎல் அவருக்கு சிறந்த அனுபவம் கொடுத்தது.

குஜராத் டைட்டன்ஸ்

10 கோடிக்கு லாக்கி பெர்குசன்: ஒரு தாக்க பந்து வீச்சாளர், அவர் போட்டியின் எல்லா நேரத்திலும் விக்கெட் எடுக்க கூடியவராக இருப்பார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.