‘அவன் 1000 கொடுத்தால் நாம 2000 கொடுப்போம்’ தி.மு.க பகீர் ஆலோசனை வீடியோ

DMK talks to bribe for vote to urban local body election video goes viral: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுப்பது குறித்து, தூத்துக்குடி மாவட்ட திமுக ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகி ஒருவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த முறை 8 முனை போட்டி நிலவுவதால், தேர்தலில் கடும் போட்டி இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனிடையே தேர்தல் பிரச்சாரம் செய்ய இன்னும் 3 நாட்களே, மீதம் உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன.

இந்தநிலையில், ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக திமுக ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகி ஒருவர் பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்பத்தியுள்ளது.

அந்த வீடியோ தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் பகுதியில் நடந்த திமுக ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக வெளியாகியுள்ளது. அதில் நிர்வாகி ஒருவர், எதுக்கும் கவலைப்பட வேண்டாம், அவங்க 500 ரூபாய் கொடுத்தா, நாம 1000 ரூபாய் கொடுப்போம். அவங்க 1000 ரூபாய் கொடுத்தா நாம 2000 ரூபாய் கொடுப்போம். நீங்க யாரையும் விட்டுவிடாமல் ஓட்டு கேளுங்க என்று பேசுகிறார். அப்போது அருகில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அமர்ந்துள்ளார்.

அமைச்சர் இருக்கும்போதே, பணப்பட்டுவாடா குறித்து நிர்வாகி ஒருவர் மைக்கில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஏற்கனவே திமுக தேர்தல் விதி மீறல்களில் ஈடுபட்டு வருவதாக அதிமுக ஆளுநரிடம் புகார் அளித்துள்ள நிலையில், தற்போது இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.