ஆரி அர்ஜூனன் நடிக்கும் ‛டி.என்-43'

நெடுஞ்சாலை படத்தின் மூலம் பிரபலமான ஆரி அர்ஜூனன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் வின்னராகவும் வெற்றி பெற்றார். நேற்று தனது பிறந்தநாளை முன்னிட்டு தனது அடுத்தப்படம் பற்றிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ‛டி.என் -43' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை எஸ்.ஏ.எஸ் புரோடெக்ஷன் தயாரிக்க, மணிவர்மன் இயக்குகிறார். அஞ்சுகுரியன் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் துவங்கியுள்ள நிலையில், இப்படத்தின் தலைப்பை நேற்று அறிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.