ஆஸி., கிரிக்கெட் வீரர் திருமணத்துக்கு தமிழில் பத்திரிகை அடித்து அசத்தல்| Dinamalar

மெல்பர்ன்:பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல், தமிழ் பெண்ணான வினி ராமனை, மார்ச் 27ம் தேதி திருமணம் செய்ய உள்ளார். இதற்காக தமிழ் மொழியில் அச்சிடப்பட்டுள்ள திருமண பத்திரிகை அனைவரையும் கவர்ந்துள்ளது,

நிச்சயதார்த்தம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான கிளென் மேக்ஸ்வெல், 31, சில ஆண்டுகளுக்கு முன் இந்திய வம்சாவளியான வினி ராமன், 26, என்ற தமிழ்ப் பெண்ணை சந்தித்தார். அவர்களுக்கு இடையில் காதல் ஏற்படவே, இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.இதையடுத்து 2020ல் இருவீட்டாரின் சம்மதத்துடன் இவர்களது நிச்சயதார்த்தம் பாரம்பரிய ஹிந்து முறைப்படி நடந்தது.

அதே ஆண்டு அவர்களது திருமணம் நடக்க இருந்தது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, அது தள்ளிவைக்கப்பட்டது.இந்நிலையில் அவர்களது திருமணம் மார்ச் 27ம் தேதி, ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர்களின் திருமண பத்திரிகை அனைவரையும் கவர்ந்துள்ளது.


சமூக வலைதளம்

வினி ராமன் தமிழ் பெண் என்பதால், தமிழ் மொழியில் மஞ்சள் நிற திருமண பத்திரிகை அச்சிடப்பட்டுள்ளது. அந்த பத்திரிகை சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.