இதெற்கெல்லாம் அவர்தான் காரணம் : லதா ரஜினிகாந்த் காட்டம்..!

நடிகர்
தனுஷ்
மற்றும்
ஐஸ்வர்யா
பிரிந்தது அவர்கள் குடும்பத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் இருவரும் விவாகரத்து பெறப்போவதாக அறிவித்தது ரசிகர்களுக்கே அதிர்ச்சியாக இருக்கும் வேளையில் அவர்கள் குடும்பத்தினரை சார்ந்தவர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

இருப்பினும் இவர்களை பேசி சமாதானப்படுத்தி சேர்த்து வைக்கும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் பிரிவை கேட்ட
ரஜினி
கோபத்தின் உச்சிக்கே சென்றுள்ளார். தன் மகள் ஐஸ்வர்யா அவரது பிள்ளைகளின் நலனை கொஞ்சம்கூட கருத்தில் கொள்ளாது திடீரென இந்த விவாகரத்து முடிவை எடுத்தது அவரை கடும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.

இதன் காரணமாக தன் வீட்டில் தனிமையில் யாரிடமும் பேசாது இருந்துவந்த ரஜினி தற்போது சற்று தேறியுள்ளார். தன் அடுத்த படவேலைகளை ஆரம்பித்திருக்கும் ரஜினி அவரது எண்ணத்தை சற்று திசைதிருப்பியுள்ளார். இருந்தாலும் குடும்பத்தின் மீது அவருக்கு இருக்கும் கோபம் இன்னும் தணியவில்லை என்றே தகவல்கள் வருகின்றன.

சென்னையின் பிரபல தியேட்டர் உரிமையாளர் காலமானார்..சோகத்தில் ரசிகர்கள்..!

இந்நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் பிரிவிற்கு பல காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன. சமூகத்தளங்களில் பகிரப்பட்டுவரும் கருத்துக்களை பார்க்கும்போது உண்மை எது பொய் எது என்றே தெரியவில்லை. அந்த அளவிற்கு இவர்களின் பிரிவிற்கான காரணங்களாக பல கருத்துக்களை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

அதில் ஒன்றுதான் ரஜினியின் மனைவி
லதா
அனிருத்தின் மீது கொண்டுள்ள கோபம். லதாவின் நெருங்கிய உறவினரான
அனிருத்
மீது லதா ரஜினிகாந்த் கடும் கோபத்தில் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. ஏனென்றால் அனிருத் ஐஸ்வர்யா மீது காட்டிய நெருக்கம் தான் இவர்கள் பிரிவிற்கு ஒரு முக்கியமான காரணம் என்று பலபேர் கருத்து தெரிவித்து வந்த நிலையில், அதன் காரணமாக அனிருத்தின் மீது கோபத்தில் இருக்கிறாராம் லதா.

மேலும் அனிருத்தும் தனுஷும் நெருங்கி பழகிக்கொண்டிருந்த காலகட்டத்தில் இவர்கள் இருவரும் பல நடிகைகளுடன் நெருங்கி பழகியதால் தான் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாம். எனவே இதற்கு முக்கிய காரணம் அனிருத்தான் என்று கருதி லதா ரஜினிகாந்த் அவர் மீது கடும் கோபத்தில் இருப்பதாக தகவல்கள் வருவது குறிப்பிடத்தக்கது.

Sila Nerangalil Sila Manithargal – மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.