இருபது நிமிடத்தில் அஜித்தின் சாதனையை முறியடித்த விஜய்..! இது வேற லெவல் பா..!

நடிகர் விஜய்யின்
பீஸ்ட்
படத்திலிருந்து தற்போது
அரபிக் குத்து
பாடல் வெளியாகிவுள்ளது.
அனிருத்
இசையமைத்துள்ள இப்பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் எழுதியுள்ள இப்பாடல் செம வைரலாகிவருகிறது.

விஜய்
மற்றும் பூஜா ஹெக்டேவின் அசத்தல் நடனத்தில் கலர்புல்லாக வெளியாகியுள்ள இப்பாடல் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுவருகிறது. இந்நிலையில் இன்று 6 மணிக்கு வெளியான இப்பாடல் ஐந்து நிமிடத்திற்குள் 4 லட்சம் பார்வையாளர்களை பெற்றது.

வெளியானது அரபிக் குத்து..ஆனால் ரசிகர்களுக்கு ஒரு வருத்தம்..!

இதைத்தொடர்ந்து அரபிக் குத்து பாடல் வெளியாகி அரைமணி நேரத்திற்குள் 2 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இதுதவிர இப்பாடல் வெளியான அரைமணி நேரத்தில் சுமார் ஐந்து லட்சம் லைக்குகளை பெற்று மேலும் ஒரு சாதனையை பெற்றுள்ளது அரபிக் குத்து பாடல்.

இதைத்தொடர்ந்து
அஜித்
நடிப்பில் உருவான வலிமை படத்தின் நாங்க வேற மாறி பாடலின் சாதனையை விஜய்யின் அரபிக் குத்து பாடல் முறியடித்துள்ளது. மேலும் இதுவரை வெளியான விஜய் பாடல்களிலே அரபிக் குத்து பாடல்தான் அரைமணி நேரத்தில் அதிக பார்வையாளர்கள் மற்றும் அதிக லைக்குகளை பெற்ற பாடல் என்ற சாதனையை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த சாதனையை தற்போது விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் ஹாஷ்டாக் உருவாக்கி கொண்டாடி வருகின்றனர். மேலும் ஒரு பக்கத்தில் எப்போதும் போல விஜய் மற்றும் அஜித் ரசிகர்களின் போட்டியும் போய்க்கொண்டுதான் இருக்கின்றது. இந்நிலையில் பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் மாதம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் – ஐஸ்வர்யா விவகாரத்து? எஸ் ஏ சந்திரசேகர் அறிவுரை!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.