ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டின் மீது தாக்குதல் – பொலிஸ் குழுக்கள் விசாரணை

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் தற்போது பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

பிலியந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அவரின் வீட்டின் மீது இனந்தெரியாத குழுவினர் இன்று காலை கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் பல பொலிஸ் குழுக்கள் செயல்பட்டு வருவதுடன், தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.