கோவா, உத்தரகாண்டில் சட்டசபை தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு

பனாஜி:
கோவாவில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு இன்று ஒரேகட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 
பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் என 4 முக்கிய கட்சிகள் களமிறங்கியுள்ளதால் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.
வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளைப் பதிவுசெய்து வருகின்றனர்.
இதேபோல், உத்தரகாண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு இன்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.  
அங்கு மொத்தம் 81 லட்சத்து 72 ஆயிரத்து 173 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 11 ஆயிரத்து 697 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது. தேர்தல் களத்தில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் போட்டியிடுகின்றன.
மேலும், உத்தர பிரதேசத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. உ.பி.யில் ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போட்டியிடுகின்றன.
9 மாவட்டங்களில் 55 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மக்கள் காலை முதல் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.