சென்னை முதலை பண்ணையில் இருந்து 1000 முதலைகள் குஜராத்தில் உள்ள ரிலையன்ஸ் முதலை பண்ணைக்கு மாற்றம்!

சென்னை: மத்தியஅரசுக்கு சொந்தமான ஈசிஆர் முதலை பண்ணையில் இருந்து 1000 முதலைகள் குஜராத்தில் உள்ள ரிலையன்ஸ் முதலை பண்ணைக்கு மாற்றம் செய்யப்படுகிறது. முதலைகளை பராமரிக்க போதிய நிதி இல்லாததால்,  நிதி நெருக்கடி காரணமாக, இந்ந மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், வடநெம்மேலி பகுதியில் மாபெரும் முதலைப் பண்ணை செயல்பட்டு வருகிறது. இங்கு 17 வகைகளை சேர்ந்த 2 ஆயிரத்துக் கும் மேற்பட்ட முதலைகள் கடந்த பல ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் இருந்து சுமாரி  1,000 முதலைகள் குஜராத் செல்கின்றன. அங்குள்ள ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான முதலைப் பண்ணையில் சேர்க்ப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த முதலைகளை பாதுகாப்பான  பெட்டிகளில் அடைத்து லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

சென்னையில் பராமரிக்கப்படும் பெரும்பாலான முதலைகள் சதுப்புநில முதலைகள்ம். இத்தகைய பெருமை வாய்ந்த முதலைப் பண்ணையில், நாள் ஒன்றுக்கு கோழி இறைச்சி, மாட்டு இறைச்சி என சுமார் 500 கிலோ இறைச்சி வரை முதலைகளுக்கு உணவாக வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த முதலைப் பண்ணை கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பதால், அதில் உள்ள முதலைகளை வேறு மாநிலத்துக்கு மாற்ற மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது.

அதன்படி, மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தின் அனுமதியுடன், இங்குள்ள கரியால், நன்னீர், சதுப்பு நில முதலைகள், அமெரிக்க முதலைகள், ஆப்பிரிக்கா மெல்லிய தாடை முதலைகள், சையாமிஸ் முதலைகள், உப்பு நீர் முதலைகள் உள்ளிட்ட பல்வேறு வகைகளை சேர்ந்த 350 ஆண் முதலைகள், 650 பெண் முதலைகள் என மொத்தம் ஆயிரம் முதலைகளை இங்கிருந்து குஜராத்திற்கு இடமாற்றம் செய்ய முடிவு செய்தது.

குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் உயிரியல் பூங்காவுக்கு முதலைகளை கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டு, கண்டெய்னர் லாரி மூலம் முதலைகள் எடுத்துச் செல்லப்படுகின்றன. இதுவரை சுமார் 300 முதலைகள் சென்னையில் இருந்து குஜராத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. மீதமுள்ள 700 முதலைகளையும் எடுத்துச்செல்லும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.