செயற்கைக்கோள் மூலம் இணையதள சேவை வழங்க உள்ள ஜியோ <!– செயற்கைக்கோள் மூலம் இணையதள சேவை வழங்க உள்ள ஜியோ –>

நாடு முழுவதும் செயற்கைக்கோள் மூலம் நேரடியாக இணையதள சேவை வழங்க உள்ளதாக ரிலையன்சின் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

லக்சம்பர்கை சேர்ந்த தொலைத்தொடர்பு நிறுவனமாக எஸ்.இ.எஸ். உடன் இணைந்து ஜியோ நிறுவனம் இந்த சேவையை வழங்க உள்ளது.

இதற்காக, ஜியோ விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம் என்ற பெயரில் புதிதாக நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், எஸ்.இ.எஸ் நிறுவனத்தின் செயற்கைக்கோள் தரவுகள் மற்றும் இணைப்புகளை ஜியோ நிறுவனம் பயன்படுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், இந்தியா மற்றும் சுற்றியுள்ள நாடுகளின் இணையதள நிறுவனங்களுக்கும், செல்போன்களுக்கும் தடையின்றி இணையசேவை வழங்கப்படும் என ரிலையன்ஸ் குறிப்பிட்டுள்ளது.

எலான் மஸ்கின் செயற்கைகோள் வழி இணையதள சேவை வழங்கும் ஸ்டார் லிங் நிறுவனம் இந்தியாவில் கால்பதிக்க முயலும் நிலையில், ஜியோ நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.