தனியார் மருத்துவக் கல்லூரி கட்டணத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும் – ராமதாஸ் கோரிக்கை

Regulate fees in private medical college : தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு கல்லூரிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அனைத்து மாணவர்களும் பிப்ரவரி 16ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது வரவேற்கத்தக்கது என்று கூறியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர். ராம்தாஸ்.

தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 50% மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரி கட்டணமான ரூ.13,610 மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவிப்பை அரசாணையாக வெளியிடுவதில் ஏன் இத்தகைய அவசரம் தமிழக அரசு காட்டவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார் அவர்.

தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “தேசிய மருத்துவ ஆணைய வழிகாட்டுதல் படி தனியார் கல்லூரிகளில் கட்டணம் குறைக்கப்படும் என்று நம்பி தனியார் கல்லூரிகளை தேர்ந்தெடுத்த ஏழை, நடுத்தர குடும்ப மாணவர்கள், முழுக்கட்டணத்தையும் செலுத்தும்படி தனியார் கல்லூரிகள் கட்டாயப்படுத்தினால் என்ன செய்வர், எங்கே போவார்கள்” என்று ட்வீட் வெளியிட்டுள்ளார் ராமதாஸ்.

தேசிய மருத்துவ ஆணைய வழிகாட்டுதல்படி தனியார் கல்லூரிகளில் 50% இடங்களுக்கு அரசு கல்லூரி கட்டணமான ரூ.13,610 மட்டும் வசூலிக்க தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். இல்லையென்றால் தனியார் மருத்துவக் கல்லூரி கட்டணக் கொள்ளையை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துவிடும் என்றும் தன்னுடைய ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் அவர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.