பிரதான சாலைகளை மொத்தமாக முடக்குவோம்… கடும் எச்சரிக்கை விடுத்த விவசாயிகள்எரிபொருள் விலை அதிகரித்து வருவதை எதிர்த்து நாட்டின் அனைத்து முக்கிய நெடுஞ்சாலைகளையும் முடக்குவதில் உறுதியாக இருப்பதாக கிரேக்க விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மத்திய கிரீஸில் உள்ள லாரிசா நகருக்கு தெற்கே ஞாயிறன்று நடந்த கூட்டத்தில், கிரேக்க பிரதமர் Kyriakos Mitsotakis உடன் ஒரு சந்திப்பைக் கோர அவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐரோப்பா முழுவதும் எரிபொருள் விலை அதிகரித்து வருவதால், கிரேக்க விவசாயிகள் தங்கள் எரிபொருள் செலவைக் குறைக்க மானியங்களைக் கோரி வருகின்றனர்.

27 உறுப்பு நாடுகள் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் எரிபொருளின் மீதான அதிக வரி விதிப்பதில் கிரீஸ் நாடு முதன்மையாக உள்ளது.
எஞ்சிய ஐரோப்பிய நாடுகளில் லிற்றர் பெட்ரோல் விலை 70 cents என இருக்க, கிரேக்கத்தில் 1.60 யூரோ என வசூலிக்கப்படுகிறது.

இந்த விலை தங்களுக்கு கட்டுப்படியாக இல்லை என குறிப்பிட்டுள்ள விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
கிரேக்க விவசாயிகள் ஏற்கனவே லாரிசாவை வடமேற்கில் உள்ள கோசானி நகரத்துடன் இணைக்கும் ஒரு பெரிய சாலையை சுமார் பத்து நாட்களாக முடக்கி வருகின்றனர்.

மேலும், தங்கள் போராட்டத்தின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை சாலையில் பாலை கொட்டி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதே நிலை நீடிக்கும் என்றால் நாங்களும் எங்கள் மந்தைகளும் உயிர் பிழைப்போமா என்பது கேள்விக்குறியாக உள்ளது என விவசாயிகள் தரப்பு கேள்வி எழுப்பியுள்ளது.   Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.