புனித நுாலை இழிவுபடுத்தியதாக ஒருவர் கொலை| Dinamalar

இஸ்லாமாபாத்-இஸ்லாம் மதத்தின் புனித நுாலை இழிவுபடுத்தியதாக ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ஜங்கிள் தேரா என்ற கிராமத்தில் நேற்று முன் தினம் ஒருவர், இஸ்லாம் மதத்தின் புனித நுாலின் சில பக்கங்களை கிழித்து தீ வைத்து எரித்ததாக தகவல் பரவியது. இதையடுத்து அங்கிருந்த சிலர் அந்த நபரை தாக்கினர். மேலும் பலருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்த தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்தனர். எந்த புத்தகத்தையும் கிழிக்கவில்லை என அந்த நபர் போலீசிடம் கூறினார். அதற்குள் திரண்ட கும்பல், போலீசிடம் இருந்து அந்த நபரை மீட்டு கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கியது. அந்த நபர் அதே இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.