மயிலாடுதுறை: காதலர் தினத்தில் கல்யாணம் முடிந்த கையோடு எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சமடைந்த ஜோடி

காதலர் தினத்தில் திருமணம் செய்துகொண்டு எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் புகுந்த தம்பதியினருக்கு பாதுகாப்பு அளிக்க எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.
மயிலாடுதுறை அருகே சீர்காழி மாதானத்தை சேர்ந்த சிவசண்முகம் என்பவர், குமரக்கோட்டம் பகுதியைச் சேர்ந்த விஜய லட்சுமி என்பவரை கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இருவரும் தங்களது பெற்றோரிடம் திருமணம் செய்துவைக்க கேட்டதற்கு விஜயலட்சுமியின் வீட்டார் மறுத்துவிட்டனர்.
இந்நிலையில், இன்று காலை இருவரும் வைத்தீஸ்வரகோயில் மாரியம்மன் சன்னதிக்குச் சென்று மாலை மாற்றி தாலிகட்டி திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து தங்களது குடும்பத்தாரால் ஆபத்து ஏற்படும் என்று பயந்த தம்பதியினர் உடனடியாக மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்தனர்.
image
இதைத் தொடர்ந்து இவர்கள் வசிக்கும் பகுதயில் உள்ள புதுப்பட்டினம் காவல்நிலைய ஆய்வாளர் சந்திரா மீட்டிங்கில் கலந்துகொள்ள எஸ்.பி அலுவலகத்திற்கு வந்திருந்தார், அவரை அழைத்த எஸ்.பி. இரண்டு வீட்டாரையும் அழைத்துப் பேசி சமாதானமாகப் போக செய்ய வேண்டும் எனவும் தகராறு ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து தம்பதியினர் போலீசாருடன் இணைந்து புகைப்படம் எடுத்துச் சென்றனர். காதலர் தினமான இன்று 7 ஆண்டு காதலுக்கு முடிவுகண்ட திருப்தியில் ஜோடியினர் மகிழ்ச்சியாக சென்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.