வருஷத்துக்கு வருஷம் அம்மணிக்கு வயசு குறையுது… மீரா ஜாஸ்மின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

Meera jasmine latest slim photos goes viral: நடிகை மீரா ஜாஸ்மினின் லேட்டஸ்ட் ஸ்லிம் ஆன புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழில் மாதவன் நடிப்பில் வெளியான ரன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் மீரா ஜாஸ்மின். பின்னர் சண்டக்கோழி, ஆய்த எழுத்து உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் மீரா ஜாஸ்மின் நடித்துள்ளார்.

தமிழில் முன்னனி நடிகையாக வலம் வந்த மீரா ஜாஸ்மின், ’பாடம் ஒன்னு ஒரு வில்லப்பம்’ என்கிற மலையாளப் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு அணில் ஜான் டைட்டஸ் என்பவரை திருமணம் செய்து கொண்ட மீரா ஜாஸ்மின், சில காலம் திரையுலகை விட்டு விலகியே இருந்தார்.

திருமணத்திற்குப் பின் திரைப்படங்களில் பெரும்பாலும் நடிக்காத மீரா, அவ்வப்போது ஒரு சில படங்களில் நடித்து வந்தார். திருமணத்திற்கு பின் விடிவி கணேஷ், சந்தானம் ஆகியோருடன் அவர் நடித்த ‘இங்க என்ன சொல்லுது’ படத்தில் நடித்தார்.

பின்னர் உடல் எடை அதிகமானதால் சினிமாவில் நடிக்கமாட்டார் என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில், கடுமையாக உடற்பயிற்சி செய்து செம ஸ்லிம்மான தோற்றத்துக்கு மாறி அதிர்ச்சி கொடுத்தது மட்டுமில்லாமல், சினிமாவிலும் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார்.

தற்போது மலையாளப் படம் ஒன்றில் நடித்து வரும் மீரா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஸ்லிம் ஆன தோற்றம் கொண்ட அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இது மீரா ஜாஸ்மின் தானா என ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.