வெளியானது அரபிக் குத்து..ஆனால் ரசிகர்களுக்கு ஒரு வருத்தம்..!

நடிகர்
விஜய்
நடிப்பில்
நெல்சன்
இயக்கத்தில் உருவான படம்
பீஸ்ட்
.
அனிருத்
இப்படத்திற்கு இசையமைக்க சன் நிறுவனம் தயாரித்துள்ளது. வருகின்ற ஏப்ரல் மாதம் இப்படம் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து படக்குழுவை அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்பு தொல்லை விடுத்து வந்தனர்.

அவர்களை மகிழ்விக்கும் வகையில் காதலர் தினத்தை முன்னிட்டு பீஸ்ட் படத்திலிருந்து ஒரு பாடல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
அரபிக் குத்து
என துவங்கும் அப்பாடலை
சிவகார்த்திகேயன்
எழுதியிருந்தார். இப்பாடல் வெளியாகும் என்று அறிவிப்பதற்காக ஒரு ப்ரோமோ ஒன்றை வெளியிட்டார் நெல்சன்.

கலகப்பாக இருந்த அந்த ப்ரோமோவில் விஜய்யும் தொலைபேசி மூலம் பங்குகொண்டார். அந்த ப்ரோமோ இறுதியில் பாடலை முடித்துவிட்டு என் வீட்டிற்கு எடுத்து வாருங்கள் என்று விஜய் கூறியிருப்பார். இந்நிலையில் காதலர் தினமான இன்று அரபிக் குத்து பாடல் வெளியானது.

உங்களுக்கெல்லாம் ஒரு நல்ல செய்தி சொல்லப்போறேன் :தனுஷ்

அசத்தலான இசையில் துள்ளலான நடனத்தில் உருவாகியுள்ள இப்பாடல் ரசிகர்களை கேட்ட நொடியிலேயே கவர்ந்தது. ஹல்லமதி என துவங்கும் அரபிக் குத்து பாடல் சற்று வித்தியாசமாகவும் ரசிகர்களை ஈர்க்கும் வகையிலும் அமைந்துள்ளது. அனிருத் மற்றும் ஜோனிதா பாடிய இப்பாடல் செம வைரலாகிவருகிறது.

இந்நிலையில் பாடல் ரசிங்கர்களுக்கு மிகவும் பிடித்திருந்தாலும் சில ரசிகர்கள் சற்று வருத்தத்தில் இருகின்றனர். ஏனென்றால் ப்ரோமோவின் இறுதியில் பாடலை எடுத்துக்கொண்டு விஜய் வீட்டிற்கு வரசொல்லியிருப்பார். எனவே இப்பாடல் வெளியாகும்போது அதன் இறுதியில் அனிருத் மற்றும் நெல்சனுடன் இணைந்து விஜய்யும் ப்ரோமோவில் கலகலப்பாக பேசியது போன்று இதிலும் பேசுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

இருப்பினும் அதைபோல் எதுவும் இடம்பெறாமல் பாடல் மட்டுமே வெளியானதால் சில ரசிகர்கள் சற்று வருத்தத்தில் இருப்பதாக தெரிகிறது. இருந்தாலும் பாடல் தற்போது விஜய் ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

பங்கர்ராஜு வெற்றி விழா : நன்றி தெரிவித்த இயக்குனர்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.