வெளியானது `பீஸ்ட்’ படத்தின் `அரபிக் குத்து’ ஹலமதி ஹபீபோ பாடல்! குஷியில் விஜய் ஃபேன்ஸ்!

நடிகர் விஜயின் நடிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தின் முதல் பாடலான `ஹலமதீ ஹபீபோ’ எனும் அரபிக் குத்து பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய், ’மாஸ்டர்’ திரைப்பட வெற்றிக்குப்பிறகு, `டாக்டர்’ பட இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் நிலையில், இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகவுள்ள இத்திரைப்படத்தின் முதல் பாடல் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது.

image

’அரபிக் குத்து’ என்று படக்குழு குறிப்பிட்டிருக்கும் இப்பாடல், `ஹலமதீ ஹபீபோ’ என்று தொடங்கியுள்ளது. இதை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். பாடல் குறித்த அப்டேட்டுடன் படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார், இசையமைப்பாளர் அனிருத், இப்பாடலின் பாடலாசிரியர் சிவகார்த்திகேயன் மூவரும் இணைந்து சமீபத்தில் வீடியோவொன்றை வெளியிட்டிருந்தனர். அதில் விஜய் பேசும் ஆடியோவையும் இணைக்கப்பட்டிருந்த நிலையில், அதுவே வைரலாகி வந்தது.

image

ஏற்கெனவே நெல்சன் முதன்முதலாக இயக்குநராக அறிமுகமான ‘கோலமாவு கோகிலா’ படத்தின் சூப்பர் ஹிட் அடித்த ‘எனக்கு இப்போ கல்யாண வயசு வந்துடுச்சி’ பாடலை சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார். அதேபோல, ‘டாக்டர்’ படத்தின் வைரல் ஹிட் அடித்த ‘செல்லம்மா’ பாடலையும் சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார். இந்த இரண்டு பாடல்களுக்குமே நெல்சன், அனிருத், சிவகார்த்திகேயன் கூட்டணி தயார் செய்து வந்த நிலையில், அந்த வரிசையில் ‘பீஸ்ட்’ படத்தின் ‘அரபிக் குத்து’ பாடலும் இணைந்துள்ளது.

image

பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாவதால் விஜய்க்கும் பூஜா ஹெக்டேவுக்குமான காதல் பாடலாக உருவாக்கப்பட்டுள்ளது. குத்து பாடலான இதன் முதல் படம், நேற்று மாலை வெளியாகியிருந்தது. தற்போது லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. பாலே டான்ஸில், நடிகர் விஜய்யுடன் நடிகை பூஜா ஹெக்டேவும் இணைந்து நடனத்தில் கலக்கியுள்ளார். பாடல் உருவாக்கப்பட்ட விதம் மிகவும் கலர்புல்லாக இருக்கிறது. இப்பாடலை, அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி இணைந்து பாடியுள்ளனர். இவர்கள் இருவரின் குரலில்தான் செல்லம்மா பாடலும் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் பாடலென்ற போதிலும்கூட அரபி மட்டுமன்றி, பாடலில் ஆங்காங்கே மலையாள வாசமும் இருக்கிறது. அனிருத்தின் ராக் நம்பர்ஸில், இந்த அரபிக் குத்து பாடலும் நிச்சயம் இடம்பெறும்தான். என்றாலும்கூட, வார்த்தைகள் பலவும் புரியாமல் இருக்கிறது. இருப்பினும், விஜய் ரசிகர்களுக்கு பாடல் குஷியையே கொடுத்திருக்கிறது. அதற்கு முக்கிய காரணம், பாடலின் மேக்கிங்தான். அந்த அளவுக்கு பிரம்மாண்டமாகவும், விஜய்யின் இளமை துள்ளலோடும் பாடல் தயாராகிப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்தி: இளையராஜா இசையமைக்கும் 1422 -வது படம் : சர்வதேச அளவில் இந்திய – ஆங்கில மொழிகளில் உருவாகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.