1200 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. நிஃப்டியும் பலத்த வீழ்ச்சி..முதல் நாளே இப்படியா?

இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் பலத்த சரிவில் காணப்படுகின்றன.

கடந்த வாரத்தில் ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை குழு கூட்டத்தின் முக்கிய முடிவுகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. வட்டி விகிதமானது அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பொருளாதாரத்தினை கருத்தில் கொண்டு, வட்டியில் ஏதேனும் மாற்றம் செய்யப்படவில்லை.

எனினும் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பணவீக்கம் உச்சம் தொட்டு வருகின்றது. இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக கச்சா எண்ணெய் விலையும் உச்சம் தொட்டு வருகின்றது. இதுவும் பங்கு சந்தைகள் சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளது.

மல்லையா, நீரவ் மோடியை தூக்கி சாப்பிட்ட ABG ஷிப்யார்டு.. இந்தியாவின் மிகப்பெரிய வங்கி மோசடி..!

சர்வதேச சந்தைகள் நிலவரம்

சர்வதேச சந்தைகள் நிலவரம்

கடந்த அமர்வில் அமெரிக்க சந்தையானது சரிவில் முடிவடைந்ததையடுத்து, ஆசிய சந்தைகள் அனைத்தும் இன்று சரிவில் காணப்படுகின்றது. இதற்கிடையில் தான் இந்திய சந்தையும் பலத்த சரிவில் காணப்படுகின்றது. இது ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே எந்த நேரத்தில் வேண்டுமானாலும் போர் வரலாம் என்ற பதற்றமான நிலை இருந்து வருகின்றது.

முதலீடுகள் வெளியேற்றம்

முதலீடுகள் வெளியேற்றம்

பிப்ரவரி 11 நிலவரப்படி, 108.53 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை அன்னிய முதலீட்டாளர்கள் வங்கியுள்ளனர். அதேசமயம் வழக்கமாக தொடர்ந்து முதலீடுகளை செய்து வந்த உள்நாட்டு முதலீட்டாளர்கள், கடந்த வார இறுதியில் 596.90 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறியுள்ளதாக என்.எஸ்.இ தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. ஆக இதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

தொடக்கம் எப்படி?
 

தொடக்கம் எப்படி?

இன்று ப்ரீ ஓபனிங் சந்தையில் சென்செக்ஸ் 1110.45 புள்ளிகள் குறைந்து, 57,042.47 புள்ளிகளாகவும், நிஃப்டி 458.30 புள்ளிகள் குறைந்து, 16,916.50 புள்ளிகளாகவும் காணப்பட்டது.

இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 1197.86 புள்ளிகள் குறைந்து, 56,955.06 புள்ளிகளாகவும், நிஃப்டி 348 புள்ளிகள் குறைந்து, 17,026.80 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதில் 463 பங்குகள் ஏற்றத்திலும்,1989 பங்குகள் சரிவிலும், 100 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

இன்டெக்ஸ்

இன்டெக்ஸ்

சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகள் சரிவிலேயே காணப்படுகின்றன. குறிப்பாக பிஎஸ்இ மெட்டல்ஸ் 3% மேலாக சரிவில் காணப்படுகின்றது. இதே பிஎஸ்இ எஃப்.எம்.சி.ஜி, பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள், பிஎஸ்இ கேப்பிட்டல் குட்ஸ், நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ மிட் கேப், பிஎஸ்இ ஸ்மால் கேப், பேங்க் நிஃப்டி, பிஎஸ்இ சென்செக்ஸ் உள்ளிட்ட குறியீடுகள் 2% மேலாக சரிவில் காணப்படுகின்றன. இதே மற்ற குறீடுகள் 1% மேலாக சரிவில் காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

இந்த பலமான வீழ்ச்சிக்கு மத்தியில் நிஃப்டி குறியீட்டில் உள்ள டிசிஎஸ், ஓ.என்.ஜி.சி பங்குகள் மட்டுமே டாப் கெயினர்களாகவும், இதே ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல், ஹெச்.டி.எஃப்.சி லைஃப், ஐடிசி, ஹெச்.டி.எஃப்.சி, டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டிசிஎஸ் மட்டுமே டாப் கெயினராக உள்ளது. இதே ஹெச்.டி.எஃப்.சி, டாடா ஸ்டீல், இந்தஸ்இந்த் வங்கி, எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

தற்போது நிலவரம்

தற்போது நிலவரம்

10.17 மணி நிலவரப்படி, ஆரம்பத்தில் 1200 புள்ளிகளுக்கு மேலாக இருந்த சென்செக்ஸ் தற்போது 1167.22 புள்ளிகள் குறைந்து,56,985.70 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 353.7 புள்ளிகள் குறைந்து, 17,021.05 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

opening bell: sensex crashed 1200 points, nifty trade nearly 17,000

opening bell: sensex crashed 1200 points, nifty trade nearly 17,000/1200 புள்ளிகL சரிவில் சென்செக்ஸ்.. நிஃப்டியும் வீழ்ச்சி..முதல் நாளே இப்படியா?

Story first published: Monday, February 14, 2022, 10:50 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.