27 ஆண்டுகளுக்கு முன் காதலியிடம் காதலைச் சொன்ன அதே இடத்துக்குச் சென்ற பிரித்தானியருக்கு நேர்ந்த பரிதாபம்


தான் தன் காதலியிடம் 27 ஆண்டுகளுக்கு முன் காதலைச் சொன்ன அதே இடத்துக்கு மீண்டும் சென்ற பிரித்தானியர் ஒருவர் பரிதாபமாக பலியானதைக் குறித்த ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

இங்கிலாந்திலுள்ள Altrincham என்ற நகரைச் சேர்ந்தவர் Dr Jamie Butler (54). Butlerக்கு இரட்டையர்களான இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.

இந்நிலையில், தான் தன் மனைவியிடம் முதன்முதலாக தன் காதலை வெளிப்படுத்திய அதே இடத்துக்குச் சென்று, மீண்டும் தன் காதலை வெளிப்படுத்த திட்டமிட்டுள்ளார் Butler.
 

அதன்படி, கணவனும் மனைவியுமாக Striding Edge என்ற மலையுச்சிக்கு சென்றுள்ளார்கள். மலையேற்றத்தால் Butlerஇன் மனைவி களைத்துப்போக, வேகமாகச் சென்ற Butler தான் தன் மனைவியிடம் 27 ஆண்டுகளுக்கு முன் காதலைச் சொன்ன அந்த இடத்தைத் தேடிச் சென்றிருக்கிறார்.

அப்போது அங்கே பனி மூட்டமாக இருந்திருக்கிறது. தனக்கு முன் சென்ற கணவனை வெகு நேரமாக காணாததால், அவரைக் கூப்பிட்டுப் பார்த்திருக்கிறார் அவரது மனைவி. அவரிடமிருந்து சத்தம் எதுவும் வராததால் பயந்துபோன அவர் பொலிசாருக்கு தகவலளித்திருக்கிறார்.

மீட்புக்குழுவினருடன் விரைந்து வந்த பொலிசார், Butler மலையுச்சியின் கீழே விழுந்து கிடப்பதைக் கண்டுள்ளனர். அவர்கள் அங்கு விரைந்தபோது, Butler பலத்த காயம் காரணமாக உயிரிழந்துவிட்டிருக்கிறார்.

பிரச்சினை என்னவென்றால், Butler உயிரிழந்த நேரத்தில், அவர் கால் பந்து அணி ஒன்றின் மருத்துவராக பணியாற்றிவந்திருக்கிறார். அவர் மீது சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட, அதன் காரணமாக அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்திருக்கிறார்.

ஆகவே, அவர் தற்கொலை செய்துகொண்டாரா என்பதை அறிவதற்காக நிதிமன்ற விசாரணை ஒன்றிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால், Butlerஉடைய மருத்துவர், அவருக்கு தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என்ற எண்ணம் இல்லை, தன் மீதான களங்கத்தை துடைக்கவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவருக்கு இருந்தது என்று கூறியுள்ளார்.

அவரது சகாக்கள் பலரும் அவரை குறித்து பல்வேறு நல்ல விடயங்களையே கூறியுள்ளனர்.

ஆகவே, Butler தற்கொலை செய்துகொள்ளவில்லை, அவர் தவறி விழுந்துதான் உயிரிழந்துள்ளார் என்ற முடிவுக்கு நீதிமன்றத்தின் சார்பில் நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரி வந்துள்ளார்.

 Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.