உக்ரைன் விவகாரம்: ரஷ்யாவுக்கு சீனா ஆதரவு; ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன்: உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவை சீனா ஆதரிப்பதை ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கையாகக் கருத வேண்டும் என அமெரிக்கா கூறியுள்ளது. ஐரோப்பிய பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு இது மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனின் தலைவர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா தலைமையிலான ‘நேட்டோ’ நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருந்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வரும் ரஷ்யா இதனால் தங்கள் உள்நாட்டின் பாதுகாப்புக்கும், கிரிமியாவின் ஸ்திரத்தன்மைக்கும் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறுகிறது.

இந்நிலையில் உக்ரைன் எல்லையில் ஒரு லட்சம் படை வீரர்களை ரஷ்யா குவித்துள்ளது. இதனால் எந்த நேரத்திலும் படையெடுப்பு நடக்கலாம் என்ற சூழல் நிலவுகிறது.

இந்நிலையில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆந்தணி பிளின்கன், “உக்ரைன் மீதான படையெடுப்பில் ரஷ்ய அதிபர் புதின் இறுதி முடிவை எடுக்கவில்லை என அந்நாடு கூறுவதை நம்புவதற்கில்லை. புதின் எந்தவித முன்னறிவிப்புமே இன்றி தாக்குதலை நடத்தலாம் என்றே நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று கூறியுள்ளார்.

அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனின் தலைவர் ஜான் கிர்பி கூறுகையில், “அமெரிக்க பாதுகாப்புச் செயலர் லாய்ட் ஆஸ்டின் செவ்வாய்க்கிழமை ஐரோப்பா நாடுகளுக்குச் செல்கிறார். அவர் பெல்ஜியத்தில் உள்ள நேட்டோ தலைமையகத்தில் ஆலோசனைகள் மேற்கொள்கிறார். பின்னர் அங்கிருந்து போலந்து செல்கிறார். அங்கு 3000 அமெரிக்கப் படைகள் நிறுத்தத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதுதொடர்பான ஆய்வுகளை மேற்கொள்கிறார். பின்னர் லிதுவேனியா செல்கிறார். இன்னமும் கூட உக்ரைன் படையெடுப்பு தொடர்பாக ரஷ்யா இறுதி முடிவு எடுக்கவில்லை என்று கூறப்படுவதை எல்லாம் நாங்கள் தயாராக இல்லை. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தாக்குதல் நடைபெறலாம்” என்றார்.

அமெரிக்க செய்தித் தொடர்பாளர் நெட் பிரின்ஸ் கூறும்போது, “இப்போதைக்கு ரஷ்ய எல்லையில் இருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்புப் பெறும் திட்டம் ஏதுமில்லை. இருப்பினும் தூதரக ரீதியான பேச்சுவார்த்தைகளுக்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எட்டுவதற்கான வாய்ப்புகள் இன்னும் திறந்தே இருக்கின்றன” என்றார்.

உக்ரைன் எல்லையில் ரஷ்ய படைகள் குவிக்கப்பட்டுள்ளதால் உக்ரைனில் உள்ள அமெரிக்க தூதரக அலுவலகம், தலைநகர் கியவ்வில் இருந்து லிவிவ் நகருக்கு மாற்றப்பட்டுள்ளது. உக்ரைனில் இன்னும் எஞ்சியுள்ள அமெரிக்கர்கள் நாடு திரும்ப வேண்டுகிறேன் என்றார்.

சீன ஆதரவு ஓர் எச்சரிக்கை செய்தி.. ரஷ்யாவை சீனா ஆதரிப்பது ஐரோப்பா பாதுகாப்புக்கு ஓர் எச்சரிக்கை என்று கிர்பி கூறியுள்ளார். சத்தமில்லாமல் ரஷ்யாவை சீனா ஆதரிக்கிறது. இதை கவனமாகக் கையாள வேண்டும். ரஷ்யாவின் படைகள் குவிப்பு குறித்து போலந்து அதிபர், பாதுகாப்பு அமைச்சருடன் முக்கியப் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.