ஐஸ்வர்யாவின் செயலால் கடுப்பான தனுஷ்..முற்றும் மோதல்..!

நடிகர்
தனுஷ்
மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து செய்தி அனைவரும் அறிந்ததே. பல ஆண்டுகளாக நிலவி வந்த கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர் என்று தகவல்கள் வந்தன. இதுமட்டுமில்லாமல் இவர்களின் பிரிவிற்கு உண்மையான காரணம் தெரியாமல் பலபேர் பலவிதமான கருத்துக்களை சமூகத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் இவர்கள் பிரிந்தாலும் இவர்களை சேர்த்து வைக்கும் பணிகளை இவர்களது குடும்பத்தினர் செய்து வருகின்றனர். குறிப்பாக தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா முழுமூச்சாக இவர்களை சேர்த்து வைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

தனுஷ் – ஐஸ்வர்யா போல் பிரியும் மற்றுமொரு நட்சத்திர ஜோடி?..வருத்தத்தில் ரசிகர்கள்.

இந்நிலையில் ரஜினியின் கோபத்தை தணிக்க
ஐஸ்வர்யா
மீண்டும் தனுஷுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவிப்பதாக சில நாட்களாக தகவல்கள் வந்தன. அதன் காரணமாக கஸ்தூரி ராஜா தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவை திருப்பதி சென்று வருமாறு வற்புறுத்தினாராம். இதற்கு ஐஸ்வர்யா சம்மதம் தெரிவித்த நிலையில் தனுஷ் இதற்கு செவி சாய்க்கவில்லையாம்.

இருப்பினும் தன் அப்பாவின் பேச்சைக்கேட்டு தனுஷ் திருப்பதி செல்ல சம்மதம் தெரிவித்ததாகவும் சமூகத்தளங்களில் பேசப்பட்டது. இந்நிலையில் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவான ஆல்பம் பாடலின் ப்ரோமோ இன்று வெளியாகியுள்ளது.

அனிருத்
இசையமைத்துள்ள இந்த ப்ரோமோ பாடல் தற்போது வெளியாகியுள்ள நிலையில் இதில் ஐஸ்வர்யா தனது பெயரை மாற்றிய விஷயம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஐஸ்வர்யா தனுஷ் என்று தனது கணவரின் பெயரை வைத்திருந்த இவர் தற்போது தனுஷ் பெயரை நீக்கிவிட்டு தனது அப்பாவின் பெயரை போட்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என மாற்றியுள்ளார்.

இருப்பினும் இன்னும் சமூகத்தளங்களில் இவரின் பெயர் ஐஸ்வர்யா தனுஷ் என்றே இருக்கிறது. இந்நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா மீண்டும் இணைந்து வாழ வாய்ப்பிருப்பதாக பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது ஐஸ்வர்யா தனது பெயரை மாற்றியிருப்பது இவர்கள் இனி சேர வாய்ப்பில்லை என்பதை குறிப்பதாக, ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் – ஐஸ்வர்யா விவகாரத்து? எஸ் ஏ சந்திரசேகர் அறிவுரை!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.