காதலர் தினம் அதுவுமா Don’t fall in love சொன்ன சினேகா …! பிரசன்னாவுடம் ஏற்ப்பட்ட மனக்கசப்பு…?

காதலர் தினத்தன்று நடிகை
சினேகா
பதிவிட்ட போஸ்ட் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. எதற்காக இவர் இப்படி ஒரு அட்வைஸ் கொடுக்கிறார்…இவருக்கு என்னவாயிற்று என அனைவரும் கேட்க துவங்கி விட்டனர்.தமிழ் சினிமாவின் புன்னகை இளவரசி என பெயர் வாங்கியவர் சினேகா. இவருக்கு,
அச்சமுண்டு
அச்சமுண்டு படத்தில் இணைந்து நடித்த போது நடிகர்
பிரசன்னா
மீது காதல் ஏற்பட்டது.

கிட்டதட்ட மூன்று ஆண்டுகளாக ரகசியமாக காதலித்து வந்த இந்த ஜோடி, பிறகு கல்யாணம் செய்து கொண்டது.கோலிவுட்டின் அழகான நட்சத்திர காதல் தம்பதியில் இவர்களும் ஒருவர். 2012 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு நடிப்பை தொடர்ந்த சினேகா, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

மூன்றாண்டுகள் காத்திருப்பு… ஒரு வழியாக முடிவுக்கு வந்த விக்ரம் படம்: இயக்குனர் மகிழ்ச்சி..!

பிரசன்னா தற்போது துப்பறிவாளன் 2 படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். சினேகாவும், டைரக்டர் அருண் வைத்தியநாதன் இயக்கும் ஷாட் பூட் 3 படத்தில் வெங்கட் பிரபுவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார். இவர்கள் மிக அரிதாகவே தங்களின் தனிப்பட்ட மற்றும் குடும்ப போட்டோக்களை சோஷியல் மீடியாவில் பகிர்வதுண்டு.

அப்படி காதலர் தினத்தை முன்னிட்டு நடிகை சினேகா இன்ஸ்டாகிராமில் க்யூட்டான போட்டோ ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் கண்களில் காதல் பொங்க, இருவரும் வெள்ளை நிற டி ஷர்ட்டின் பின்னால் லவ் என எழுதப்பட்ட பிளாக் அண்ட் ஒயிட் போட்டோவை பகிர்ந்துள்ளார். அதோடு, Don’t fall in love என கேப்ஷன் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் எதற்காக சினேகா இப்படி சொல்கிறார்…என்ன ஆச்சு என கேட்க துவங்கி விட்டனர்.

ஆனால் அதோடு தொடர்ச்சியாக சில புள்ளிகள் வைத்து, Rise in Love என குறிப்பிட்டுள்ளார். ஓ இதைத் தான் இப்படி சொல்ல வந்தாரா என கமெண்ட் செய்துள்ளனர். காதலித்து திருமணம் செய்து கொண்ட சினேகாவே எதற்காக காதலில் விழாதீர்கள் என சொல்கிறாரே என யோசித்தவர்கள் சினேகாவின் இந்த முழு கேப்ஷனையும் படித்து விட்டு லைக்குகளை வாரி வழங்கி வருகின்றனர்.

மீண்டும் தலைதூக்கும் உதயநிதி..! எந்த எந்த படங்கள் தெரியுமா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.