மாதவன் இயக்கி, நடித்துள்ள 'ராக்கெட்ரி' வெளியீடு அறிவிப்பு

தமிழில் ஒரு காலத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டவர் மாதவன். 'அலைபாயுதே' படத்தில் அறிமுகமான மாதவன் தொடர்ந்து சில வருடங்கள் தமிழில் குறிப்பிடத்தக்க நாயகர்களில் ஒருவராக இருந்தார். அதன்பின் ஹிந்தியில் கவனம் செலுத்தப் போய்விட்டார். நீண்ட இடைவெளிக்குப்பிறகு தமிழில் விஜய் சேதுபதியுடன் அவர் நடித்த 'விக்ரம் வேதா' படத்தின் மூலம் மீண்டும் பேசப்பட்டார்.

அதற்குப் பிறகு 'ராக்கெட்ரி' படத்தில் நடிக்க ஆரம்பித்தார். அப்படத்தை ஆனந்த் மகாதேவன் இயக்கிய நிலையில் அவர் படத்திலிருந்து விலகினார். அதன்பின் மாதவனே படத்தின் இயக்குனர் பொறுப்பையும் ஏற்றார். இந்திய விண்வெளித்துறை விஞ்ஞானியாக பணி புரிந்து உளவு பார்த்தாக சொல்லப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்ட நம்பி நாராயணனின் பயோபிக் தான் இந்தப் படம்.

இப்படத்தின் டிரைலர் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. கொரோனா பிரச்சினைகள் காரணமாக படத்தின் வேலைகள் தள்ளிப் போயின. இந்நிலையில் இப்படம் ஜுலை 1ம் தேதி வெளியாகும் என நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

கடந்த ஐந்து வருடங்களாகத் தயாரிப்பில் இருந்த இப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.