விவசாயிகள் போராட்டத்தின் போது செங்கோட்டையில் அத்துமீறி நுழைந்த நடிகர் தீப் சித்து சாலை விபத்தில் உயிரிழந்தார்

2021 குடியரசு தினத்தன்று செங்கோட்டையில் அத்துமீறி நுழைந்து விவகாரத்தில் தொடர்புடைய நடிகர் தீப் சித்து அரியானாவில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.

பஞ்சாபி மொழி படங்களில் நடித்த நடிகர் தீப் சித்து, இன்று இரவு ஹரியானாவில் நடந்த சாலை விபத்தில் இறந்ததாக சோனேபத் போலீசார் உறுதிப்படுத்தினார்.

குண்ட்லி-மனேசர்-பல்வால் விரைவுச்சாலையில் இரவு 9 மணியளவில் இந்த விபத்து நடந்தது. இதில் பயணம் செய்த மூன்று பேரில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின் போது கடந்த ஆண்டு 2021 குடியரசு தினத்தன்று செங்கோட்டையில் நிஷான் சாஹிப்பை ஏற்றியதற்கு பொறுப்பேற்ற நடிகர் சித்து நாடு முழுவதும் அறியப்பட்டார்.

சித்து 1984 இல் பஞ்சாபின் ஸ்ரீ முக்த்சர் சாஹிப் மாவட்டத்தில் ஜாட் சீக்கிய குடும்பத்தில் பிறந்தார். அவர் தனது 31 வயதில் திரையுலகில் காலடி எடுத்துவைத்தார்.

நேற்று காதலர் தினத்தை கொண்டாடிய தீப் சித்து இன்று மரணடைந்தது அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.