இலங்கை வீரர் ஹசரங்காவுக்கு கொரோனா பாதிப்பு

கான்பெர்ரா, 
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது 20 ஓவர் போட்டிக்கு முன்பாக நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. 

இதையடுத்து அவர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய போட்டிகளில் அவரால் விளையாட முடியாது. நடப்பு தொடரில் கொரோனாவில் சிக்கிய 3-வது இலங்கை வீரர் ஆவார். ஏற்கனவே குசல் மென்டிஸ், பினுரா பெர்னாண்டோ கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 24 வயதான ஹசரங்காவை சில தினங்களுக்கு முன்பு ஐ.பி.எல். ஏலத்தில் ரூ.10¾ கோடிக்கு ெபங்களூரு அணி வாங்கியது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.