எப்பவும் இப்படியே இருங்கண்ணே: தனுஷால் நிம்மதியடைந்துள்ள ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளான
தனுஷ்
, ஐஸ்வர்யா ஜோடி இருவரும் கடந்த 18 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் இருவரும் திடீரென கடந்த மாதம் 17ஆம் தேதி பிரிய போவதாக அறிவித்தனர். இவர்களின் இந்த முடிவு ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரத்திற்கு பேரதிர்ச்சியாக அமைந்தது.

இவர்கள் இருவரும் பிரிவிற்கான காரணம் என்ன என்பது குறித்து கோலிவுட் வட்டாரங்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர். ஆனாலும் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து செய்யவில்லை. வழக்கமான குடும்ப தகராறுதான். அவர்கள் இருவருக்கும் அறிவுரை வழங்கியுள்ளதாக தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா தெரிவித்திருந்தார்.

மேலும் இவர்களின் விவாகரத்து முடிவை ரஜினி சிறியதும் விரும்பவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின. தற்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவை மீண்டும் சேர்த்து வைக்கும் முயற்சியும் ஒரு புறம் மும்முரமாக நடந்து வருகிறது. குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும் இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இருவரது நட்பு வட்டாரத்தினரும், அவர்களை மீண்டும் சேர்ந்து வைக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விரைவில் ஆண்டவர் தரிசனம்… கமலின் ‘விக்ரம்’ படத்தின் மாஸ் அப்டேட்..!

இந்நிலையில் விவாகரத்திற்கு பிறகு தனது மூத்த மகன் யாத்ராவுடன், தனுஷ் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தற்போது ‘
நானே வருவேன்
‘ படப்பிடிப்பிற்காக ஊட்டியில் உள்ள தனுஷுடன், அவரது மகன்
யாத்ரா
நேரம் செலவிட்டு வருவதாக தெரிகிறது.

View this post on Instagram A post shared by Dhanush (@dhanushkraja)

விவாகரத்து அறிவிப்பிற்கு பின்னர் தனுஷ் படப்பிடிப்பு தளத்தில் கூட யாருடனும் சரியாக பேசுவதில்லை என்ற செய்திகள் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் சிரித்த முகத்துடன் தனது மகன் யாத்ராவுடன் தனுஷ் இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர். இந்த மாதிரி எப்பவும் சிரிச்ச முகத்தோட இருங்க அண்ணே என்று வாழ்த்தி வருகின்றனர் ரசிகர்கள்.

Thalapathy

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.