'காலிஸ்தான் பிரதமராக வருவேன்' – கெஜ்ரிவால் கூறியதாக சொல்லும் வீடியோவை வெளியிட்டது பாஜக!

‘பஞ்சாப் முதல்வராகவோ அல்லது காலிஸ்தானின் பிரதமராகவோ நான் வருவேன்’ என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாக குமார் விஸ்வாஸ் பேசிய வீடியோவை பாஜக வெளியிட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் வரும் 20ம் தேதி சட்டசபை பொதுத்தேர்தல் நடக்கிறது. இதற்காக காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் அமித் மாளவியா தனது ட்விட்டர் பக்கத்தில், ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனர்களில் ஒருவரும், அதன்பின் பாஜகவில் இணைந்தவருமான குமார் விஸ்வாஸ் பேட்டி அளித்த வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

“One day, he told me he would either become CM (of Punjab) or first PM of an independent nation (Khalistan),” Former AAP leader Kumar Vishwas recounts his conversation with Arvind Kejriwal.

This could be extremely dangerous, if AAP were to form Govt in Punjab.#SavePunjab pic.twitter.com/uUSSaqKfDW
— Amit Malviya (@amitmalviya) February 16, 2022

அந்த வீடியோவில், அரவிந்த் கெஜ்ரிவால் ஒருமுறை என்னிடம், ‘ஒருநாள் நான் பஞ்சாப் முதல்வராக அல்லது காலிஸ்தானின் பிரதமராக வருவேன்’ என கூறியதாக குமார் விஸ்வாஸ் தெரிவிக்கிறார். இந்த வீடியோவினை பகிர்ந்து, ‘பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால் மிகவும் ஆபத்து’ என்று அமித் மாளவியா பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: கடுமையான எரிபொருள் தட்டுப்பாட்டில் இலங்கை… 40,000 டன் பெட்ரோல், டீசலை கொடுத்த இந்தியாSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.