கேரளா: இளம் வயது எம்.எல்.ஏ.வை மணக்கிறார் இந்தியாவின் இளம் வயது மேயர் ஆர்யா!

கேரளாவில் எம்.எல்.ஏ. சச்சின் தேவுக்கும், திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரனுக்கும் திருமணம் நடைபெற உள்ளது.

திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயராக இருப்பவர் ஆர்யா ராஜேந்திரன். 21 வயதில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றதன் மூலம் இந்தியாவிலேயே மிகக்குறைவான வயதில் மேயர் பதவியேற்ற பெண் என்ற பெருமையை இவர் பெற்றவர் ஆவார். இவருக்கும், பாலுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான சச்சின் தேவுக்கும் திருமணம் நடக்க உள்ளது. 28 வயதாகும் சச்சின் தேவ், கேரள சட்டப்பேரவையில் மிக இளவயது உறுப்பினர் ஆவார்.

image
”ஆர்யாவும், சச்சின் தேவும் சிறுவயதில் இருந்தே இந்திய மாணவர் சங்கத்தில் வளர்ந்தவர்கள். அதனால் இருவருக்கு இடையிலும் நல்ல நட்பு இருக்கிறது. கொள்கைப்பிடிப்புள்ள இவர்கள், சேர்ந்து தம்பதிகளாக வாழ்வது பொருத்தமாக இருக்கும். திருமண தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை” என எம்எல்ஏ சச்சின் தேவின் தந்தை நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ‘டர்பன் அணிந்தால் நீங்கள் சர்தாரா? – மோடி, கெஜ்ரிவாலை சாடிய பிரியங்கா காந்திSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.