சிம்பு இப்படி செய்வாருன்னு எதிர்பாக்கல..! நடிகரின் கருத்தால் குழப்பத்தில் ரசிகர்கள்..!

திரைக்கு முன் நடிக்க தெரிந்த சிம்புவிற்கு திரைக்கு பின் நடிக்கத்தெரியாது என்பதே பல ரசிகர்களின் கருத்து. தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவர் சிம்பு. அதன் காரணமாக பல பிரச்சனைகளிலும் சிக்கியுள்ளார். இந்நிலையில் தற்போது சிம்புவை பற்றி நடிகர் ஒருவர் கூறியிருக்கும் தகவல் பலருக்கும் அதிர்ச்சியளிக்கும் விதமாக அமைந்துள்ளது.

தற்போது டிவியில் ஒளிபரப்பாகும் பல ரியாலிட்டி ஷோக்கள் TRP ரேட்டிங்கை குறிவைத்தே பல விளம்பரங்களை செய்துவருகின்றன. பொதுவாக டிவி நிகழ்ச்சியில் யாராவது உணர்ச்சிவசப்பட்டு அழுதாலோ, சண்டையிட்டாலோ அதை திரும்ப திரும்ப போட்டுக்காட்டி தங்களது TRP ரேட்டிங்கை ஏற்றுவார்கள்.

விவாகரத்திற்கு பிறகு ஐஸ்வர்யா அளித்த முதல் பேட்டி..தனுஷ் பற்றி என்ன சொன்னார் தெரியுமா ?

இது இயல்பான ஒன்றுதான். இருப்பினும் இதற்கெல்லாம் ஆரம்பமாக அமைந்தது
ஜோடி நம்பர் ஒன்
நிகழ்ச்சி தான். கடந்த 2007 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் சிம்பு நடுவராக பங்கேற்றார். அப்போது அதில் போட்டியாளராக கலந்துகொண்ட நடிகர்
பப்லு
என்று அழைக்கப்படும் ப்ரித்விராஜிற்கும் சிம்புவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து சிம்பு உணர்ச்சிவசப்பட்டு அழுதார். மேலும் தான் நிகழ்ச்சியை விட்டு செல்கிறேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அப்போது இந்த நிகழ்ச்சியில் நடந்த இந்த நிகழ்வு பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு இதைப்பற்றி பிரித்விராஜ் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, எனக்கும் சிம்புவுக்கும் ஏற்பட்ட மோதலில் உண்மையில்லை. அதெல்லாம் TRPக்காக நாங்கள் நடத்திய நாடகமே. அதை நீங்கள் உண்மை என்று நம்பினால் அது உங்கள் தவறு என கூறியுள்ளார்.

ஏற்கனவே இந்த நிகழ்வு நாடகம் என சில ரசிகர்கள் பேசிவந்த நிலையில் தற்போது பிரித்விராஜ் இப்படி கூறியிருப்பது அதை உறுதிப்படுத்தியுள்ளது. தற்போது இவர் அளித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Sila Nerangalil Sila Manithargal – மன இறுக்கத்திற்கு பேராறுதல்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.