பெண்கள் உலக கோப்பை: சாம்பியம் பட்டம் வெல்லும் அணிக்கு எத்தனை கோடி தெரியுமா..?

துபாய், 
12-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் அடுத்த மாதம் (மார்ச்) 4-ந்தேதி முதல் ஏப்ரல் 3-ந்தேதி வரை நடக்கிறது. ஆஸ்திரேலியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிக்கான பரிசுத்தொகை விவரத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று அறிவித்தது. 

போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.26½ கோடியாகும். இது முந்தைய உலககோப்பை தொடருக்கான பரிசுத்தொகையை விட 75 சதவீதம் கூடுதலாகும். சாம்பியன் கோப்பையை வெல்லும் அணிக்கு ஏறக்குறைய ரூ.10 கோடி வழங்கப்படும். 
2017-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியுடன் ஒப்பிடும் போது இந்த பரிசுத்தொகை ஒரு மடங்கு அதிகமாகும். 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.4½ கோடி கிடைக்கும். அரைஇறுதியில் தோற்கும் அணிகள் தலா ரூ.2¼ கோடியை பரிசாக பெறும். லீக் சுற்றில் ஒவ்வொரு வெற்றிக்கும் ரூ.19 லட்சம் வழங்கப்படும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.