ரஜினியை சரி கட்டிய தி.மு.க… கராத்தே தியாகராஜன் பகீர்

Karate Thiyagarajan Speech About Rajini Leave politics :ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் விலகியதற்கு முக்கிய காரணம் திமுகதான் என்று அவரின் நெருங்கிய நண்பரும், தற்போதைய பாஜகவின் ஆதரவாளருமான கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் பல ஆண்டுகளாக அரசியலுக்கு வர உள்ளதாக சொல்லிக்கொண்டிருந்த நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு அதற்காக முதற்கட்ட பணிகளை தொடங்கினார். தனது அரசியல் பிரவேசத்தின் தொடக்கமாக அவ்வப்போது ரசிகர்களை சந்தித்து வந்த ரஜினிகாந்த் விரைவில் கடசியின் பெயர் அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தார்.

ஆனால் கடந்த 2020 ஆண்டு இறுதியில் திடீரென கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ரஜினிகாந்த் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், திடீரென தான் அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்தார். அவரின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தனது உடல்நிலை காரணமாக அரசியல் அறிவிப்பை வாபஸ் பெறுவதாக அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் பலரும் மாற்றுக்கட்சியில் தங்களை இணைத்துக்கொண்ட நிலையில், ரஜினி அரசியலுக்கு வந்தால் நிச்சயம் ஆட்சியை பிடித்துவிடுவார் என்று அவருக்கு ஆதரவாக பல கருத்தக்களை தெரிவித்துக்கொண்டிருந்த கராத்தே தியாஜராஜன், தற்போது ரஜினி அரசியலுக்கு வராதது குறித்து கூறிய கருத்து பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

ரஜினி தனது அரசியல் அறிவிப்பை வாபஸ் பெற்றதை தொடர்ந்து பாஜகவில் இணைந்த கராத்தே தியாகராஜன் தற்போது உள்ளாட்சி தேர்தலில் பாஜகவின் சென்னை மண்டல பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறார். இதன் ஒருபகுதியாக பாஜக வேட்பாளர்களை ஆதரித்து சென்னை நங்கநல்லூரில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், திமுகவை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

அப்போது அவர் கூறுகையில், பிரஷாந்த் கிஷோரை வைத்து அந்த அண்ணாமலையை சரிக்கட்டி விட்டீர்கள். ஆனால் பாஜக தலைவர் அண்ணாமலையை உங்களால் சரிக்கட்ட முடியாது. பாஜக தலைவர் அண்ணாமலைக்கு வேறு முகம் உள்ளது. ஒரு முகத்தை தான் இப்போது நீங்கள் பார்த்திருப்பீர்கள். என்று எச்சரித்துள்ள அவர், அமைச்சர் த.மோ.அதன்பரசன தலைமையில் தான் இந்த பகுதியில் பணப்பட்டுவாடா நடக்கிறது.

தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளதால் பணப்பட்டுவாடா நடப்பது தீவிரமடைந்து வருகிறது. இதனை தடுக்க பாஜக தலைவர் அண்ணாமலை பல வழிமுறைகளை கூறியுள்ளார். அதனை பின்பற்றி பணப்பட்டுவாடாவை தடுப்போம் என்று கூறியுள்ளார். ரஜினி தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு அரசியல் வாஸ் பெற்றதாக கூறியிருந்த நிலையில் கராத்தே தியாகராஜனின் இந்த கருத்து தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.