”எல்லாத்துக்கும் ’நேரு’தான் காரணமா?; இன்னுமா அவர சொல்லிட்டு இருக்கீங்க?” – மன்மோகன்சிங்

எல்லா பிரச்னைகளுக்கும் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவையே பிரதமர் மோடி தலைமையிலான அரசு குற்றம்சாட்டுவதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விமர்சித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிரதமர் மோடி மற்றும் பாஜக அரசாங்கத்தை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ”அரசியல் காரணங்களுக்காகவும், பொய்யை மறைத்தும் நாட்டை ஒருபோதும் காங்கிரஸ் பிளவுபடுத்தவில்லை. மக்கள் ஒருபுறம், பணவீக்கம், வேலையிழப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறார்கள். மறுபுறம் நாட்டை ஏழரை ஆண்டுகளாக ஆட்சி செய்துவரும் பாஜக தனது தவறை ஒப்புக்கொள்ளாமல், அதை திருத்தி கொள்ளவும் முன்வராமல், எதற்கெடுத்தாலும், முன்னாள் பிரதமர் நேருவையே குற்றம்சாட்டிவருகிறது.
Manmohan Singh: Punjab Polls: Rather than admitting mistakes, BJP govt  blaming Nehru for people's problems, says Manmohan Singh - The Economic  Times
பிரதமர் பொறுப்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக நான் கருதுகிறேன். ஆகவே, மோடி கடந்த கால வரலாற்றை குறைக்கூறிக்கொண்டிருப்பதை தவிர்த்துவிட்டு, பிரதமருக்கு உண்டான கண்ணியத்தை காக்க வேண்டும். நான் 10 வருடமாக பிரதமராக இருந்தபோது, என் செயல்களின் மூலமாக பேசினேன். உலகத்தின் முன் நம் நாட்டின் மதிப்பையும், கௌரவத்தையும் இழக்க நான் ஒருபோதும் அனுமதித்ததில்லை. இந்தியாவின் பெருமையை நான் ஒருபோதும் குலைக்கவில்லை.

பலவீனமானவன், அமைதியானவன், ஊழல்வாதி என்று என் மீது பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்த பாஜக மற்றும் அதன் பி, சி டீம்கள் நாட்டின் முன் அம்பலபட்டு வருகின்றன என்பதில் எனக்கு ஓரளவு திருப்தியாக உள்ளது. பாஜக அரசு கடைபிடிக்கும் தேசியவாதம் என்பது பிரிட்டிஷின் பிரித்தாளும் கொள்கையை அடிப்படையாக கொண்டது. ஒன்றிய அரசுக்கு பொருளாதார கொள்கை குறித்து எந்த புரிதலும் இல்லை.
வெளியுறவுக்கொள்கையில் இந்த அரசாங்கம் தோல்வியடைந்துவிட்டது. சீனா நமது எல்லையில் அமர்ந்துகொண்டு நம்மை ஒடுக்க பார்க்கிறது. பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் மாறிக்கொண்டிருக்கிறார்கள்” என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.