ஐ.எஸ்.எல் கால்பந்து: சென்னை-ஒடிசா ஆட்டம் ‘டிரா’

கோவா,
8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நடைபெற உள்ளது.

இதில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் சென்னையின் எப்.சி மற்றும் ஒடிசா எப்.சி அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. சென்னை அணியில் ரஹிம் அலி 2-வது நிமிடத்திலும், வல்ஸ்கிஸ் 69-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். 
கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் இறங்கிய சென்னை அணி டிரா கண்டதால் ஏறக்குறைய அரைஇறுதி வாய்ப்பை இழந்திருக்கிறது. 17-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி 5 வெற்றி, 5 டிரா, 7 தோல்வி என்று 20 புள்ளிகளுடன் 8-வது இடம் வகிக்கிறது. இன்றைய ஆட்டத்தில் மும்பை சிட்டி- ஜாம்ஷெட்பூர் (இரவு 7.30 மணி) அணிகள் சந்திக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.