கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு.. 90 நிமிடம் உடற்பயிற்சி செய்தால்.. ரொம்ப நல்லதாம்!

கொரோனா தடுப்பூசி
போட்ட பிறகு சுமார் ஒன்றரை மணி நேரம் மிதமான அளவில்
உடற்பயிற்சி
செய்தால் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று ஒரு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

தடுப்பூசி போட்ட பிறகு சுமார் ஒன்றரை மணி நேரம் பிரிஸ்க் வாக் செய்தாலோ அல்லது நிறுத்தப்பட்ட சைக்கிளை மிதமான வேகத்தில் ஓட்டினாலோ நமது உடலில் ஆன்டிபாடிகள் உருவாவது அதிகரிக்கிறதாம். உடற்பயிற்சி செய்யாதவர்களுக்கு நான்கு வாரங்களில் ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தி இவர்களுக்கு ஒன்றரை மணி நேரத்தில் ஏற்படுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உடற்பயிற்சி செய்யாதவர்களை விட உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இது விரைவாக நிகழ்வதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.

கோவிட் “அலைகள் ஓய்வதில்லை”.. அடுத்தடுத்து வரும்.. ஒழியாது.. விஞ்ஞானிகள்

அமெரிக்காவில் உள்ள அயோவா மாநில பல்கலைக்கழகத்தில்தான் இதுதொடர்பான ஆய்வு நடத்தப்பட்டு அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. டிரெட்மில் மூலம் எலிகளை வைத்து இந்த சோதனையை அவர்கள் செய்து பார்த்துள்ளனர். இதுகுறித்து ஆய்வாளர் குழுவைச் சேர்ந்த மரியான் கோஹுட் கூறுகையில், எலிகளுக்கு பைசர் – பயோஎன்டெக் தடுப்பூசி கொடுக்கப்பட்டு பின்னர் ஒன்றரை மணி நேரம் அவற்றை டிரெட்மில்லில் ஓட வைத்தோம். இதில் அந்த எலிகளுக்கு தடுப்பு சக்தி விரைவாக ஏற்படுவதை அறிய முடிந்தது என்றார்.

எலிகளுக்கு நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து மனிதர்களுக்கு இந்த சோதனை நடத்தப்பட்டது. 28 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அதில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு உடல் பருமன் பிரச்சினை இருந்தது. இவர்களுக்கு நடத்தப்பட்ட 90 நிமிட சோதனையின்போது ஒரே சீரான வேகத்தில் அவர்கள் ஓடுமாறு அறிவுறுத்தப்பட்டனர். மேலும் ஹார்ட் பீட் ரேட்டும் நிமிடத்திற்கு 120-140க்குள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்பட்டது.

நாட்டுக்காக உயிர் நீத்த என் குடும்பத்தினர்.. கேலி செய்கிறது பாஜக.. பிரியங்கா குமுறல்

மறுபக்கம் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால் அவர்களுக்கு பலன் கிடைக்கிறதா என்றும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அதில் பலன் கிடைக்கவில்லை. மாறாக ஒன்றரை மணி நேரம் செய்யும்போது நல்ல பலன் கிடைப்பது தெரிய வந்தது. குறுகிய நேர உடற்பயிற்சியை விட நீண்ட நேர உடற்பயிற்சிக்கு ஏன் பலன் கிடைக்கிறது என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக கோஹுட் கூறியுள்ளார். இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என்றும் அவர் தெரிவிக்கிறார்.

நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்யும்போது, ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. தடுப்பு சக்தி செல்கள் அதிக அளவில் ரத்தத்தில் ஆக்டிவ் ஆக இருக்க வகை செய்கிறது. இதன் காரணமாகவே நோய் எதிர்ப்பு சக்தியும் விரைவிலேயே அதிகரிப்பதாகவும் அவர் கூறுகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.