கோதாவரி – காவிரி இணைப்பு குறித்த ஆலோசனை மகிழ்ச்சி: ஒருங்கிணைப்புக் குழு அமைக்க வேண்டும் – மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தல்.!

கோதாவரி- காவிரி இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த, சம்பந்தப்பட்ட மாநிலங்களை ஒருங்கிணைக்க சிறப்புப் பணிக்குழு அமைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “கோதாவரி-கிருஷ்ணா,  பெண்ணாறு- காவிரி இணைப்பு திட்டம் தொடர்பாக தமிழகம், கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 5 தென்மாநில நீர்வளத்துறை அதிகாரிகளுடன் மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் நாளை அவசர ஆலோசனை நடத்தவிருப்பது வரவேற்கத்தக்கது!

2022- 23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், இத்திட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதுகுறித்து கருத்தொற்றுமை ஏற்படுத்த  கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று கடந்த 4-ஆம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தேன். இந்த சூழலில் 5 மாநில ஆலோசனை நடப்பது மகிழ்ச்சியளிக்கிறது!

கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த, இதில் சம்பந்தப்பட்ட அனைத்து மாநிலங்களையும் ஒருங்கிணைக்க சிறப்புப் பணிக்குழு ஒன்றை அமைக்க வேண்டும்; திட்டத்தை நிறைவேற்ற இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என நாளையக் கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்த வேண்டும்” என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். 
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.